﻿எழுத்தெனப்படுப 
அகர முத
னகர விறுவாய் முப்பஃ தென்ப 
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே  
அவைதாங்
குற்றிய லிகரங் குற்றிய லுகர 
மாய்தமென்ற 
முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன  
அவற்றுள்
அ-இ-உ 
எ-ஒ என்னு மப்பா லைந்து
மோரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப  
ஆ-ஈ-ஊ-ஏ-ஐ 
ஓ-ஔ என்னு மப்பா லேழு 
மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப  
மூவள பிசைத்த லோரெழுத் தின்றே  
நீட்டம் வேண்டி னவ்வள புடைய 
கூட்டி யெழூஉத லென்மனார் புலவர்  
கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை 
நுண்ணிதி னணர்ந்தோர் கண்ட வாறே  
ஔகார விறுவாய்ப் 
பன்னீ ரெழுத்து முயிரென மொழிப  
னகார விறுவாய்ப் 
பதினெ ணெழுத்து மெய்யென மொழிப  
மெய்யொ டியையினு முயிரிய றிரியா  
மெய்யி னளவே யரையென மொழிப  
அவ்விய னிலையு மேனை மூன்றே  
அரையளவு குறுகன் மகர முடைத்தே 
யிசையிட னருகுந் தெரியுங் காலை  
உட்பெறு புள்ளி யுருவா கும்மே  
மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்  
எகர ஒகரத் தியற்கையு மற்றே  
புள்ளி யில்லா வெல்லா மெய்யு 
முருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலு 
மேனை யுயிரொ டுருவுதிரிந் துயிர்த்தலு 
மாயீ ரியல வுயிர்த்த லாறே  
மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே  
வல்லெழுத் தென்ப கசடதபற  
மெல்லெழுத் தென்ப ஙஞணநமன  
இடையெழுத் தென்ப யரலவழள  
அம்மூ வாறும் வழங்கியல் மருங்கின் 
மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை  
டறலள வென்னும் புள்ளி முன்னர்க் 
கசப வென்னு மூவெழுத் துரிய  
அவற்றுள்
லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்  
ஙஞ-ண நமன வெனும்புள்ளி முன்னர்த் 
தத்த மிசைக ளொத்தன நிலையே  
அவற்றுள், ணனஃகான் முன்னர்க் 
க ச ஞ ப ம ய வவ் வேழு முரிய  
ஞ ந ம வ வென்னும் புள்ளி முன்னர் 
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே  
மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்  
யரழ வென்னும் புள்ளி முன்னர் 
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்  
மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந் 
தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே  
அ இஉ அம் மூன்றுஞ் சுட்டு  
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா  
அளபிறந்  துயிர்த்தலு மொற்றிசை நீடலு 
முளவென மொழிப விசையொடு சிவணிய 
நரம்பின் மறைய வென்மனார் புலவர் 
குற்றிய லிகர நிற்றல் வேண்டும் 
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் 
காவயின் வரூஉ மகர மூர்ந்தே  
புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே 
யுணரக் கூறின் முன்னர்த் தோன்றும்  
நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் 
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே  
இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே 
கடப்பா  டறிந்த புணரிய லான  
குறியதன் முன்ன ராய்தப் புள்ளி 
யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே  
ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும்  
உருவினு மிசையினு மருகித் தோன்று 
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா 
வாய்த மஃகாக் காலை யான  
குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு 
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே  
ஐஔ வென்னு மாயீ ரெழுத்திற் 
கிகர வுகர மிசைநிறை வாகும்  
நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி  
குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே  
ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி 
யிரண்டிறந்  திசைக்குந் தொடர்மொழி யுளப்பட 
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே  
மெய்யி னியக்க மகரமொடு சிவணும்  
தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து 
மெய்ந்நிலை மயக்க மான மில்லை  
ய ர ழ வென்னு மூன்று முன்னொற்ற 
க ச த ப ங ஞ ந ம வீரொற் றாகும்  
அவற்றுள், ரகார ழகாரங் குற்றொற் றாகா  
குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் 
றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல  
செய்யு ளிறுதிப் போலி மொழிவயின் 
னகார மகார மீரொற் றாகும்  
னகாரை முன்னர் மகாரங் குறுகும்  
மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு 
மெழுத்துய றிரியா வென்மனார் புலவர்  
அகர இகர மைகார மாகும்  
அகர உகர மௌகார மாகும்  
அகரத் திம்பர் யகரப் புள்ளியு 
மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்  
ஓரள பாகு மிடனுமா ருண்டே 
தேருங் காலை மொழிவயி னான  
இகர யகர மிறுதி விரவும்  
பன்னீ ருயிரு மொழிமுத லாகும்  
உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா  
கதந பமவெனு மாவைந் தெழுத்து 
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே  
சகரக் கிளவியு மவற்றோ ரற்றே 
அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே  
உ ஊ ஒ ஓ வென்னு நான்குயிர் 
வ என் னெழுத்தொடு வருத லில்லை  
ஆ எ ஒ எனு மூவுயிர் ஞகாரத் துரிய  
ஆவோ டல்லது யகர முதலாது 
முதலா வேன தம்பெயர் முதலும்  
குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி 
னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  
முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ 
தப்பெயர் மருங்கி னிலையிய லான  
உயிர்ஔ வெஞ்சிய விறுதி யாகும்  
கவவொ டியையி னெவு மாகும்  
எ என வருமுயிர் மெய்யீ றாகாது  
ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே  
ஏ-ஒ எனுமுயிர் ஞகாரத் தில்லை  
உ ஊ கார நவவொடு நவிலா  
உச்ச கார மிருமொழிக் குரித்தே  
உப்ப கார மொன்றென மொழிப 
விருவயி னிலையும் பொருட்டா கும்மே  
எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே  
ஞண நம னயரல வழள வென்னு 
மப்பதி னொன்றே புள்ளி யிறுதி  
உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்  
உப்ப காரமொடு ஞகாரையு மற்றே 
யப்பொரு ளிரட்டா  திவணை யான  
வகரக் கிளவி நான்மொழி யீற்றது  
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த 
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப 
புகரறக் கிளந்த வஃறிணை மேன  
உந்தி முதலா முந்துவளி தோன்றித் 
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் 
பல்லு மிதழு நாவு மூக்கு 
மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா 
னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி 
யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் 
பிறப்பி னாக்கம் வேறுவே றியல 
திறப்படத் தெரியுங் காட்சியான  
அவ்வழி
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா 
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்  
அவற்றுள்
அ ஆ ஆயிரண் டங்காந் தியலும்  
இ ஈ எ ஏ ஐயென விசைக்கு 
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன 
வைவைதா
மண்பன் முதனா விளிம்புற லுடைய  
உ ஊ ஒ ஓ ஔவென விசைக்கு 
மப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்  
தத்தந் திரிபே சிறிய வென்ப  
ககார ஙகார முதனா வண்ணம்  
சகார ஞகார மிடைநா வண்ணம்  
டகார ணகார நுனிநா வண்ணம் 
அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின  
அண்ண நண்ணிய பன்முதன் மருங்கி 
னாநுனி பரந்து மெய்யுற வொற்றத் 
தாமினிது பிறக்குந் தகார நகாரம்  
அணரி நுனி நா வண்ண மொற்ற 
றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும்  
நுனிநா வணரி யண்ணம் வருட 
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்  
நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற 
வாவயி னண்ண மொற்றவும் வருடவும் 
லகார ளகார மா யிரண்டும் பிறக்கும்  
இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்  
பல்லித ழியைய வகாரம் பிறக்கும்  
அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை 
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்  
மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் 
சொல்லிய பள்ளி நிலையின வாயினு 
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்  
சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் 
தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந் 
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி 
யொத்த காட்சியிற் றம்மியல் பியலும்  
எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து 
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் 
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரிறப  நாடி 
யளபிற் கோட லந்தணர் மறைத்தே  
யஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு 
மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே  
மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி 
னிரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ 
தறுநான் கீறொடு நெறிநின் றியலு 
மெல்லா மொழிக்கு மிறுதியு முதலு 
மெய்யே யுயிரென் றாயீ ரியல  
அவற்றுள்
மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்  
குற்றிய லுகரமு மற்றென மொழிப  
உயிர்மெய் யீறு முயிரீற் றியற்றே  
உயிரிறு சொன்மு னுயிர்வரு வழியு 
முயிரிறு சொன்முன் மெய்வரு வழியு 
மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியு 
மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் 
றிவ்வென வறியக் கிளக்குங் காலை 
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் 
றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே  
அவற்றுள்
நிறுத்த சொல்லி னீறா கெழுத்தொடு 
குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் 
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் 
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுந் 
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலு
மூன்றே திரிபிட னொன்றே யியல்பென 
வாங்கந் நான்கே மொழிபுண ரியல்பே  
அவைதாம்
மெய்பிறி தாதன் மிகுதல் குன்றலென் 
நிவ்வென மொழிப திரியு மாறே  
நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியு 
மடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய  
மருவின் றொகுதி மயங்கியன் மொழியு 
முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே  
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் 
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையு 
மெழுத்தே சாரியை யாயிரு பண்பி 
னொழுக்கல் வலிய புணருங் காலை  
ஐஒடு குஇன் அதுகண் ணென்னு 
மவ்வா றென்ப வேற்றுமை யுருபே  
வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் 
கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும்  
ஆற னுருபி னகரக் கிளவி 
யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்  
வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே  
உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் 
றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே  
அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே  
அவைதாம்
இன்னே வற்றே யத்தே யம்மே 
யொன்னே யானே யக்கே யிக்கே 
யன்னென் கிளவி யுளப்பட பிறவு 
மன்ன வென்ப சாரியை மொழியே  
அவற்றுள்
இன்னி னிகர மாவி னிறுதி 
முன்னர்க் கெடுத லுரித்து மாகும்  
அளவாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை 
னஃகான் றஃகா னாகிய நிலைத்தே  
வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்மு 
னஃகா னிற்ற லாகிய பண்பே  
னஃகான் றஃகா னான்க னுருபிற்கு  
ஆனி னகரமு மதனோ ரற்றே 
நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே  
அத்தி னகர மகரமுனை யில்லை  
இக்கி னிகர மிகரமுனை யற்றே  
ஐயின் முன்னரு மவ்விய னிலையும்  
எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி 
யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே 
குற்றிய லுகர முற்றத் தோன்றாது  
அம்மி னிறுதி கசதக் காலைத் 
தன்மெய் திரிந்து ஙஞந வாகும்  
மென்மையு மிடைமையும் வரூஉம் காலை 
யின்மை வேண்டு மென்மனார் புலவர்  
இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் 
கின்னென் சாரியை யின்மை வேண்டும்  
பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப 
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந் 
தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணு
மொட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் 
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா 
திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை 
யுடைமையு மின்மையு மொடுவயி னொக்கும்  
அத்தே வற்றே யாயிரு மொழிமே 
லொற்றுமெய் கெடுத தெற்றென் றற்றே 
யவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே  
காரமுங் கரமுங் கானொடு சிவணி 
நேரத் தோன்று மெழுத்தின் சாரியை  
அவற்றுள்
கரமுங் கானு நெட்டெழுத் திலவே  
வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய  
ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும்  
புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது 
மெய்யொடுஞ் சிவணு மவ்வியல் கெடுத்தே  
மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்  
எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே 
யுடம்படு மெய்யி னுருவுகொளல் வரையார்  
எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி 
யிசையிற் றிரித னிலைஇய பண்பே  
அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயி
னின்ன வென்னு மெழுத்துக்கட னிலவே  
கசதப முதலிய மொழிமேற் றோன்றும் 
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் 
ஙஞநம வென்னு மொற்றா கும்மே 
யன்ன மரபின் மொழிவயி னான  
ஞநம யவவெனு முதலாகு மொழியு 
முயிர்முத லாகிய மொழியு முளப்பட 
வன்றி யனைத்து மெல்லா வழியு 
நின்ற சொன்மு னியல்பா கும்மே  
அவற்றுள்
மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் 
சொல்லிய தொடர்மொழி யிறுதி யான  
ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் 
வினையோ ரனைய வென்மனார் புலவர்  
மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் 
வருவழி நின்ற வாயிரு புள்ளியும் 
வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே  
வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி 
மேற்கூ றியற்கை யாவயி னான  
லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் 
தநவென வரிற் றனவா கும்மே  
ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்  
உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் 
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியு 
மியல்பா குநவு முறழா குநவுமென் 
றாயீ ரியல வல்லெழுத்து வரினே  
ஔவென வரூஉ முயிரிறு சொல்லும் 
ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியுங் 
குற்றிய லுகரத் திறுதியு முளப்பட 
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே  
உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும் 
புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரு 
மெல்லா வழியு மியல்பென மொழிப  
அவற்றுள்
இகர விறுபெயர் திரிபிட னுடைத்தே  
அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே  
புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும் 
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற்
றம்மி னாகிய தொழிற்சொன் முன்வரின் 
மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலு 
மம்முறை யிரண்டு முரியவை யுளவே 
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்  
மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் 
வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலு
மியற்கை மருங்கின் மிகற்கை தோன்றலு 
முயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ் 
சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ் 
சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலுஞ் 
சாரியை யியற்கை யுறழத் தோன்றலு 
முயர்திணை மருங்கி னொழியாது வருதலு 
மஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலு 
மெய்பிறி  தாகிடத் தியற்கை யாதலு 
மன்ன பிறவுந் தன்னியன் மருங்கின் 
மெய்பெறக் கிளந்து பொருள் வரைந் திசைக்கு 
மைகார வேற்றுமைத் திரிபென மொழிப  
வேற்றுமை யல்வழி இஐ என்னு 
மீற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய 
வவைதா
மியல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவு 
முறழா குநவு மென்மனார் புலவர்  
சுட்டுமுத லாகிய விகர விறுதியு 
மெகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் 
சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் 
யாவென் வினாவி னையெ னிறுதியும் 
வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ் 
சொல்லியன் மருங்கி னுளவென மொழிப  
நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங் 
குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டலு 
மறியத் தோன்றிய நெறியிய லென்ப  
ஆற னுருபினு நான்க னுருபினுங் 
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை 
யீறாகு புள்ளி யகரமொடு நிலையு 
நெடுமுதல் குறுகு மொழிமுன் னான  
நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது  
உகரமொடு புணரும் புள்ளி யிறுதி 
யகரமு முயிரும் வருவழி யியற்கை  
உயிரும் புள்ளியு மிறுதி யாகி 
யளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி 
யுளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந் 
தத்தங் கிளவி தம்மகப் பட்ட 
முத்தை வரூஉங் காலந் தோன்றி 
னொத்த தென்ப வேயென் சாரியை  
அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் 
புரைவ தன்றாற் சாரியை யியற்கை  
குறையென் கிளவி முன்வரு காலை 
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை  
குற்றிய லுகரக் கின்னே சாரியை  
அத்திடை வரூஉங் கலமெ  னளவே  
பனையெ னளவுங் காவெ னிறையு 
நினையுங் காலை யின்னொடு சிவணும்  
அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி 
யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே 
யவைதாங்
கசதப வென்றா நமவ வென்றா
வகர வுகரமோ டவையென மொழிப  
ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் 
கூறிய கிளவிப் பல்லா  றெல்லா 
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி 
யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே  
பலரறி சொன்முன் யாவ ரென்னும் 
பெயரிடை வகரங் கெடுதலு மேனை 
யொன்றறி சொன்முன் யாதென் வினாவிடை 
யொன்றிய வகரம் வருதலு மிரண்டும் 
மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே 
அ ஆ உ ஊ ஏ ஔ வென்னு 
மப்பா லாற னிலைமொழி முன்னர் 
வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை  
பல்லவை நுதலிய வகர விறுபெயர் 
வற்றொடு சிவண லெச்ச மின்றே  
யாவென் வினாவு மாயிய திரியாது  
சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி 
யொட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே  
சுட்டுமுத லாகிய வையெ னிறுதி 
வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே  
யாவென் வினாவி னையெ னிறுதியு
மாயிய றிரியா தென்மனார் புலவ 
ராவயின் வகர மையொடுங் கெடுமே  
நீயெ  னொருபெயர் நெடுமுதல் குறுகு 
மாவயி னகர மொற்றா கும்மே  
ஓகார விறுதிக் கொன்னே சாரியை  
அஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக்குக் 
கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே  
ஞநவென் புள்ளிக் இன்னே சாரியை  
சுட்டுமுதல் வகர மையு மெய்யுங் 
கெட்ட விறுதி யியற்றிரி பின்றே  
ஏனை வகர மின்னொடு சிவணும்  
மஃகான் புள்ளிமு னத்தே சாரியை  
இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே  
நூம்மெ  னிறுதி யியற்கை யாகும்  
தாநா மென்னு மகர விறுதியும் 
யாமெ னிறுதியு மதனொ ரன்ன 
ஆஎ ஆகும் யாமெ னிறுதி 
யாவயின் யகரமெய் கெடுதல் வேண்டு 
மேனை யிரண்டு நெடுமுதல் குறுகும்  
எல்லா மென்னு மிறுதி முன்னர் 
வற்றென் சாரியை முற்றத் தோன்று 
மும்மை நிலையு மிறுதி யான  
உயர்திணை யாயி னம்மிடை வருமே  
எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியு 
மெல்லீரு மென்னு முன்னிலை யிறுதியு 
மொற்று முகரமுங் கெடுமென மொழிப 
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி 
யும்மை நிலையு மிறுதி யான 
தம்மிடை வரூஉம் படர்க்கை மேன 
நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே  
தான்யா னென்னு மாயீ ரிறுதியு 
மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே  
அழனே புழனே யாயிரு மொழிக்கும் 
மத்து மின்னு முறழத் தோன்ற 
லொத்த தென்ப வுணரு மோரே  
அன்னென் சாரியை யேழ னிறுதி 
முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப  
குற்றிய லுகரத் திறுதி முன்னர் 
முற்றத் தோன்று மின்னென் சாரியை  
நெட்டெழுத் திம்ப ரற்றுமிகத் தோன்று 
மப்பான் மொழிக ளல்வழி யான  
அவைதாம்
இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப  
எண்ணி னிறுதி யன்னொடு சிவணும்  
ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉ 
மெல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை 
யானிடை வரினு மான மில்லை 
யஃதென் கிளவி யாவயிற் கெடுமே 
யுய்தல் வேண்டும் பஃகான் மெய்யே  
யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய 
வாய்த விறுதியு மன்னொடு சிவணு 
மாய்தங் கெடுத லாவயி னான  
ஏழ  னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் 
சாரியைக் கிளவி யியற்கையு மாகும் 
மாவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே  
புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் 
சொல்லிய வல்ல வேனைய வெல்லாந் 
தேருங் காலை யுருபொடு சிவணிச் 
சாரியை நிலையுங் கடப்பா டிலவே  
அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் 
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றிற் 
றத்த மொத்த வொற்றிடை மிகுமே  
வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியு 
மெனவே னெச்சமுஞ் சுட்டி னிறுதியு 
மாங்க வென்னு முரையசைக் கிளவியு 
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே  
சுட்டின்முன்னர் ஞநமத் தோன்றி 
னொட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும்  
யவமுன் வரினே வகர மொற்றும்  
உயிர்முன் வரினு மாயிய றிரியாது  
நீட வருதல் செய்யுளு ளுரித்தே  
சாவ வென்னுஞ் செயவெ னெச்சத் 
திறுதி வகரங் கெடுதலு முரித்தே  
அன்ன வென்னு முவமக் கிளவியு 
மண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியுஞ் 
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லு 
மேவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ் 
செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியுஞ் 
செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியு 
மம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் 
பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட 
வன்றி யனைத்து மியல்பென மொழிப  
வாழிய வென்னுஞ் செயவென் கிளவி 
யிறுதி யகரங் கெடுதலு முரித்தே  
உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்  
பலவற் றிறுதி நீடுமொழி யுளவே 
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான  
தொடர லிறுதி தம்முற் றாம் வரின் 
லகரம் றகரவொற் றாகலு முரித்தே  
வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும்  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே  
மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே  
மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை  
அத்தவண் வரினும் வரைநிலை யின்றே  
பலவற் றிறுதி யுருபிய னிலையும்  
ஆகார விறுதி யகர வியற்றே  
செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியு 
மவ்விய றிரியா தென்மனார் புலவர்  
உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி 
மெய்ம்மை யாக வகர மிகுமே 
ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும் 
யாவென் வினாவும் பலவற் றிறுதியு 
மேவல் குறித்த வுரையசை மியாவுந் 
தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியொ 
டன்றி யனைத்து மியல்பென மொழிப  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே  
குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு 
மறியத் தோன்று மகரக் கிளவி  
இராவென் கிளவிக் ககர மில்லை  
நிலாவென் கிளவி யத்தொடு சிவணும்  
யாமரக் கிளவியும் பிடாவும் தளாவு 
மாமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே  
வல்லெழுத்து மிகினு மான மில்லை  
மாமரக் கிளவியு மாவு மாவு 
மாமுப் பெயரு மவற்றோ ரன்ன 
வகரம் வல்லெழுத் தவையவ ணிலையா 
னகர மொற்று மாவு மாவும்  
ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே  
ஆன்முன் வரூஉ மீகார பகரந் 
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே  
குறியத னிறுதிச் சினைகெட வுகரந் 
மறிய வருதல் செய்யுளு ளுரித்தே  
இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் 
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே  
இனியணி யென்னுங் காலையு மிடனும் 
வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன  
இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி 
நின்ற விகர முகர மாத 
றொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே  
சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே  
பதக்குமுன் வரினே தூணிக் கிளவி 
முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே  
உரிவரு காலை நாழிக் கிளவி 
இறுதி இகர மெய்யொடுங் கெடுமே 
டகார மொற்று மாவயி னான  
பனியென வரூஉங் கால வேற்றுமைக் 
கத்து மின்னுஞ் சாரியை யாகும்  
வளியென வரூஉம் பூதக் கிளவியு 
மவ்விய னிலையல் செவ்வி தென்ப  
உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே  
புளிமரக் கிளவிக் கம்மே சாரியை  
ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே  
வல்லெழுத்து மிகினு மான மில்லை 
யொல்வழி யறிதல் வழக்கத் தான  
நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக் 
கானிடை வருத லைய மின்றே  
திங்கண் முன்வரி னிக்கே சாரியை  
ஈகார விறுதி யாகார வியற்றே  
நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரு 
மீயென மரீஇய விடம்வரை கிளவியு 
மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்  
இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉ 
முடனிலை மொழியு முளவென மொழிப  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே  
நீயெ னொருபெய ருருபிய னிலையும் 
மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்  
உகர விறுதி யகர வியற்றே  
சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும்  
ஏனவை வரினே மேனிலை இயல்பே  
சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே  
அன்றுவரு காலை யாவா குதலு 
மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ் 
செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே  
எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் 
திரிபிட னுடைய தெரியுங் காலை 
யம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே 
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை  
ழகர வுகர நீடிட னுடைத்தே 
யுகரம் வருத லாவயி னான  
ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே  
சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையு 
மொற்றிடை மிகா அ வல்லெழுத் தியற்கை  
ஊகார விறுதி யாகார வியற்றே  
வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கு
நினையுங் காலை யவ்வகை வரையார்  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே  
குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கு 
நிற்றல் வேண்டு முகரக் கிளவி  
பூவெ  னொருபெய ராயியல் பின்றே 
யாவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே  
ஊவெ னொருபெய ராவொடு சிவணும்  
அக்கென் சாரியை பெறுதலு முரித்தே 
தக்கவழி யறிதல் வழக்கத் தான  
ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கு
மின்னிடை வரினு மான மில்லை  
எகர வொகரம் பெயர்க்கீ றாகா 
முன்னிலை மொழிய வென்மனார் புலவர் 
தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான  
தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும் 
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா  
ஏகார விறுதி யூகார வியற்றே  
மாறுகோ ளெச்சமும் வினாவு மெண்ணுங் 
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே  
ஏயெ னிறுதிக் கெகரம் வருமே  
சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே  
பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்  
ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர் 
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே  
சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும்  
விசைமரக் கிளவியு ஞெமையு நமையு 
மாமுப் பெயருஞ் சேமர வியல  
பனையு மரையு மாவிரைக் கிளவியு 
நினையுங் காலை யம்மொடு சிவணு
மையெ னிறுதி யரைவரைந்து கெடுமே 
மெய்யவ ணொழிய வென்மனார் புலவர்  
பனையின் முன்ன ரட்டுவரு காலை 
நிலையின் றாகு மையெ னுயிரே 
யாகாரம் வருத லாவயி னான  
கொடிமுன் வரினே யையவ ணிற்பக் 
கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி  
திங்களு நாளு முந்து கிளந் தன்ன  
மழையென் கிளவி வளியிய னிலையும்  
செய்யுண் மருங்கின் வேட்கை யென்னு 
மையெ னிறுதி யவாமுன் வரினே 
மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர் 
டகார ணகார மாதல் வேண்டும்  
ஓகார விறுதி யோகார வியற்றே  
மாறுகொ ளெச்சமும் வினாவு மையமுங்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்  
ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே  
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே 
யொகரம் வருத லாவயி னான 
இல்லொடு கிளப்பி னியற்கை யாகும்  
உருபிய னிலையு மொழியுமா ருளவே 
யாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்  
ஔகார விறுதிப் பெயர்நிலை முன்ன 
ரல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் 
வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே 
யவ்விரு வீற்று முகரம் வருதல் 
செவ்வி தென்ப சிறந்திசி னோரே 
ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்ன 
ரல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே 
யுகரம் வருத லாவயி னான  
ஞநமவ வியையினு முகர நிலையும்  
நகர விறுதியு மதனோ ரற்றே  
வேற்றுமைக் குக்கெட வகர நிலையும்  
வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி 
வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை  
ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே  
ணகார விறுதி வல்லெழுத் தியையின் 
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே  
ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை  
ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே  
விண்ணென வரூஉங் காயப் பெயர்வயி 
னுண்மையு முரித்தே யத்தென் சாரியை 
செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை  
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல  
கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே  
வேற்றுமை யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் 
வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே  
முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும்  
மகர விறுதி வேற்றுமை யாயிற் 
றுவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே  
அகர ஆகாரம் வரூஉங் காலை 
யீற்றுமிசை யகர நீடலு முரித்தே  
மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே 
செல்வழி யறிதல் வழக்கத் தான  
இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே  
அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும்  
அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே 
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் 
வரைநிலை யின்றே யாசிரியர்க்க 
மெல்லெழுத்து மிகுத லாவயி னான  
இலமென் கிளவிக்குப் படுவரு காலை 
நிலையலு முரித்தே செய்யு ளான  
அத்தொடு சிவணு மாயிரத் திறுதி 
யொத்த வெண்ணு முன்வரு காலை  
அடையொடு தோன்றினு மதனோ ரற்றே  
அளவு நிறையும் வேற்றுமை யியல  
படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயருந் 
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் 
வேற்றுமை யாயி னுருபிய னிலையு 
மெல்லெழுத்து மிகுத லாவயி னான  
அல்லது கிளப்பி னியற்கை யாகும்  
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு 
மெல்லா மெனும்பெய ருருபிய னிலையும் 
வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது  
மெல்லெழுத்து மிகினு மான மில்லை  
உயர்திணை யாயி னுருபிய னிலையும்  
நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே  
அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை 
யுக்கெட நின்ற மெய்வயி னீவர 
இடை நிலைஇ யீறுகெட ரகர 
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே 
யப்பான் மொழிவயி னியற்கை யாகும் 
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல  
ஈமுங் கம்மு முருமென் கிளவியு 
மாமுப் பெயரு மவற்றோ ரன்ன  
வேற்றுமை யாயி னேனை யிரண்டுந் 
தோற்றம் வேண்டு மக்கென் சாரியை  
வகார மிசையு மகாரங் குறுகும்  
நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன 
வத்து மான்மிசை வரைநிலை யின்றே 
யொற்றுமெய் கெடுத லென்மனார் புலவர்  
னகார விறுதி வல்லெழுத் தியையின் 
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே  
மன்னுஞ் சின்னு மானு மீனும் 
பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியு 
மன்ன வியல வென்மனார் புலவர்  
சுட்டுமுதல் வயினு மெகரமுதல் வயினு 
மப்பண்பு நிலையு மியற்கைய வென்ப  
குயினென் கிளவி யியற்கை யாகும்  
எகின்மர மாயி னாண்மர வியற்றே  
ஏனை யககினே யகரம் வருமே 
வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும்  
கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல  
மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே  
தேனென் கிளவி வல்லெழுத் தியையின் 
மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலு 
மாமுறை யிரண்டு முரிமையு முடைத்தே 
வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை  
மெல்லெழுத் மிகினு மான மில்லை  
மெல்லெழுத் தியையி னிறுதியொ டுறழும்  
இறாஅற் றோற்ற மியற்கை யாகும்  
ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே  
மின்னும் பின்னும் பன்னுங் கன்னு 
மந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல  
வேற்றுமை யாயி னேனை யெகினொடு 
தோற்ற மொக்குங் கன்னென் கிளவி  
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின் 
முதற்கண் மெய்கெட வகர நிலையு 
மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே  
ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு 
பெயரொற் றகரந் துவரக் கெடுமே  
சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்  
அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியு
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை 
மக்கண் முறைதொ கூ உ மருங்கி னான  
தானும் பேனுங் கோனு மென்னு 
மாமுறை யியற்பெயர் திரிபிட னிலவே  
தான்யா னெனும்பெய ருருபிய னிலையும்  
வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந் 
தோற்ற மில்லை யென்மனார் புலவர்  
அழனெ னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே  
முன்னென் கிளவி முன்னர்த் தோன்று
மில்லென் கிளவிமிசை றகர மொற்ற 
றொல்லியன் மருங்கின் மரீஇய மரபே  
பொன்னென் கிளவி யீறுகெட முறையின் 
முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் 
செய்யுண் மருங்கிற் றொடரிய லான  
யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் 
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே  
தாயென் கிளவி யியற்கை யாகும்  
மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே  
மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே  
அல்வழி யெல்லா மியல்பென மொழிப  
ரகார விறுதி யகார வியற்றே  
ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் 
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்  
சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்  
பீரென் கிளவி யம்மொடுஞ் சிவணும்  
லகார விறுதி னகார வியற்றே  
மெல்லெழுத் தியையி னகார மாகும்  
அல்வழி யெல்லா முறழெ  மொழிப  
தகரம் வருவழி யாய்த நிலையலும் 
புகரின் றென்மனார் புலமையோரே  
நெடியத னிறுதி யியல்புமா ருளவே  
நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லு 
மல்லது கிளப்பினும் வேற்றுமை யியல  
இல்லென் கிளவி யின்மை செப்பின் 
வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலு 
மியற்கை யாதலு மாகாரம் வருதலுங் 
கொளத்தகு மரபி னாகிட னுடைத்தே  
வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே  
நாயும் பலகையும் வரூஉங் காலை 
யாவயி னுகரங் கெடுதலு முரித்தே 
யுகரங் கெடுவழி யகர நிலையும்  
பூல்வே லென்றா வாலென் கிளவியொ 
டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே  
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல  
வெயிலென் கிளவி மழையிய னிலையும்  
சுட்டுமுத லாகிய வகர விறுதி 
முற்படக் கிளந்த வுருபிய னிலையும்  
வேற்றுமை யல்வழி யாய்த மாகும்  
மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும்  
ஏனவை புணரி னியல்பென மொழிப  
ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே  
ழகார விறுதி ரகார வியற்றே  
தாழென் கிளவி கோலொடு புணரி 
னக்கிடை வருத லுரித்து மாகும்  
தமிழென் கிளவியு மதனோ ரற்றே  
குமிழென் கிளவி மரப்பெய ராயிற் 
பீரென் கிளவியொ டோரியற் றாகும்  
பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே  
ஏழென் கிளவி யுருபிய னிலையும்  
அளவு நிறையு மெண்ணும் வருவழி 
நெடுமுதல் குறுகலு முகரம் வருதலுங் 
கடிநிலை யின்றே யாசிரியர்க்க  
பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி 
நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி  
ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே  
நூறூர்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் 
கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே  
ஐயம் பல்லென வரூஉ மிறுதி 
யல்பெய ரெண்ணினு மாயிய னிலையும்  
உயிர்முன் வரினு மாயிய றிரியாது  
கீழென் கிளவி யுறழத் தோன்றும்  
ளகார விறுதி ணகார வியற்றே  
மெல்லெழுத் தியையின் ணகார மாகும்  
அல்வழி யெல்லா முறழென மொழிப  
ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே 
தகரம் வரூஉங் காலை யான  
நெடியத னிறுதி யியல்பா குநவும் 
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் 
போற்றல் வேண்டு மொழியுமா ருளவே  
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல  
இருளென் கிளவி வெயிலிய னிலையும்  
புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல  
மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி 
தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே  
உணரக் கூறிய புணரியன் மருங்கிற் 
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே 
ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொட 
ராய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொட 
ராயிரு மூன்றே யுகரங் குறுகிடன்  
அவற்றுள்
ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா  
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு 
மெல்லா விறுதியு முகர நிறையும்  
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு வழி 
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே  
யகரம் வருவழி யிகரம் குறுகு 
முகரக் கிளவி துவரத் தோன்றாது  
ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் 
வேற்றுமை யாயின் னொற்றிடை யினமிகத் 
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி  
ஒற்றிடை யின மிகா மொழியுமா ருளவே 
யத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே  
இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரு 
நடையா யியல வென்மனார் புலவர்  
வன்றொடர் மொழியு மென்றொடர் மொழியும் 
வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே 
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் 
வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்  
மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை  
மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே  
ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரு 
மம்மிடை வரற்கு முரியவை யுளவே 
யம்மர பொழுகு மொழிவயி னான  
ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉ 
மக்கிளை மொழியு முளவென மொழிப  
எண்ணுப்பெயர்க் கிளவி யுருபிய னிலையும்  
வண்டும் பெண்டு மின்னொடு சிவணும்  
பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்  
யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய 
வாய்த விறுதியு முருபிய னிலையும்  
முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி 
மன்னல் வேண்டு மல்வழி யான  
ஏனைமுன் வரினே தானிலை யின்றே  
அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ் 
சொல்லிய பண்பி னியற்கை யாகும்  
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே  
சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் 
யாவினா முதலிய மென்றொடர் மொழியு 
மாயிய திரியா வல்லெழுத் தியற்கை  
யாவினா மொழியே யியல்பு மாகும்  
அந்நான் மொழியுந் தந்நிலை திரியா  
உண்டென் கிளவி யுண்மை செப்பின் 
முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலு 
மேனிலை யொற்றே ளகார மாதலு 
மாமுறை யிரண்டு முரிமையு முடைத்தே 
வல்லெழுத்து வரூஉங் காலையான  
இருதிசை புணரி  னேயிடை வருமே  
திரிபுவேறு கிளப்பி னொற்று முகரமுங் 
கெடுதல் வேண்டு மென்மனார் புலவ 
ரொற்றுமெய் திரிந்து னகார மாகும் 
தெற்கொடு புணருங் காலை யான  
ஒன்றுமுத லாக வெட்ட னிறுதி 
யெல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் 
குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே 
முற்ற வின்வரூஉ மிரண்டலங் கடையே  
பத்த னொற்றுக்கெட னகார மிரட்ட 
லொத்த தென்ப விரண்டுவரு காலை  
ஆயிரம் வரினு மாயிய றிரியாது  
நிறையு மளவும் வரூஉங் காலையுங் 
குறையா தாகு மின்னென் சாரியை  
ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர் 
நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம் 
வந்திடை நிலையு மியற்கைத் தென்ப 
கூறிய வியற்கை குற்றிய லுகர 
மாற னிறுதி யல்வழி யான  
முதலீ ரெண்ணினொற்று ரகர மாகு
முகரம் வருத லாவயி னான  
இடைநிலை ரகர மிரண்டெ னெண்ணிற்கு 
நடைமருங் கின்றே பொருள்வயி னான  
மூன்று மாறு நெடுமுதல் குறுகும் 
மூன்ற னொற்றே பகார மாகும்  
நான்க னொற்றே றகார மாகும்  
ஐந்த னொற்றே மகார மாகும்  
எட்ட னொற்றே ணகார மாகும்  
ஒன்பா னொகரமிசைத் தகர மொற்று 
முந்தை யொற்றே ணகார மிரட்டும் 
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட 
நிற்றல் வேண்டு மூகாரக் கிளவி 
யொற்றிய தகரம் றகர மாகும்  
அளந்தறி கிளவியு நிறையின் கிளவியுங் 
கிளந்த வியல தோன்றுங் காலை  
மூன்ற னொற்றே வந்த தொக்கும்  
ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்  
கசதப முதன் மொழி வரூஉங் காலை  
நமவ வென்னு மூன்றொடு சிவணி 
யகரம் வரினு மெட்டன்மு னியல்பே  
ஐந்து மூன்று நமவரு காலை 
வந்த தொக்கு மொற்றிய னிலையே  
மூன்ற னொற்றே வகரம் வருவழித் 
தோன்றிய வகரத் துருவா கும்மே  
நான்க னொற்றே லகார மாகும்  
ஐந்த னொற்றே முந்தையது கெடுமே  
முதலீ ரெண்ணின்மு னுயிர்வரு காலைத் 
தவலென மொழிப வுகரக் கிளவி 
முதனிலை நீட லாவயி னான  
மூன்று நான்கு மைந்தென் கிளவியுந் 
தோன்றிய வகரத் தியற்கை யாகும்  
மூன்றன் முதனிலை, நீடலு முரித்தே 
யுழக்கென் கிளவி வழக்கத் தான 
ஆறென் கிளவி முதனீ டும்மே  
ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா 
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே  
நூறுமுன் வரினுங் கூறிய வியல்பே  
மூன்ற னொற்றே நகார மாகும்  
நான்கு மைந்து மொற்றுமெய் திரியா  
ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே 
முந்தை யொற்றே ளகார மிரட்டு 
நூறென் கிளவி நகார மெய்கெட 
ஊவா வாகு மியற்கைத் தென்ப 
வாயிடை வருத லிகார ரகார 
மீறுமெய் கெடுத்து மகர மொற்றும்  
ஆயிரக் கிளவி வரூஉங் காலை 
முதலீ ரெண்ணி னுகரங் கெடுமே  
முதனிலை நீடினு மான மில்லை  
மூன்ற னொற்றே வகார மாகும்  
நான்க னொற்றே லகார மாகும்  
ஐந்தன் ஒற்றே யகார மாகும்  
ஆறன் மருங்கிற் குற்றிய லுகர 
மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும்  
ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா 
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே  
நூறா யிரமுன் வரூஉங் காலை 
நூற னியற்கை முதனிலைக் கிளவி  
நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற் 
கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே  
அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும்  
அளவு நிறையு மாயிய றிரியாது 
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையு 
முற்கிளந் தன்ன வென்மனார் புலவர்  
ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி 
யொன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே 
நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும்  
ஆயிரம் வரினே யின்னென் சாரியை 
யாவயி னொற்றிடை மிகுத லில்லை  
அளவு நிறையு மாயிய றிரியா  
முதனிலை யெண்ணின் முன் வல்லெழுத்து வரினு 
ஞநமத் தோன்றினும் யவவந் தியையினும் 
முதனிலை யியற்கை யென்மனார் புலவர்  
அதனிலை யுயிர்க்கும் யாவரு காலை 
முதனிலை யொகரம் மோவா கும்மே 
ரகரத் துகரந் துவரக் கெடுமே  
இரண்டுமுத லொன்பா னிறுதிமுன்னர் 
வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் 
மகர வளவொடு நிகரலு முரித்தே  
லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் 
னும்முங் கெழுவு முளப்படப் பிறவு 
மன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் 
செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் 
வேற்றுமை குறித்த பொருள்வயி னான  
உயிரும் புள்ளியு மிறுதி யாகிக் 
குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி 
நெறிப் பட வாராக் குறைச்சொற் கிளவியு
முயர்திணை யஃறிணை யாயிரு மருங்கி
னைம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ் 
செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் 
மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியுஞ் 
தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூஉ 
மெண்ணின் றொகுதி யுளப்படப் பிறவு 
மன்னவை யெல்லா மருவின் பாத்திய 
புணரிய னிலையிடை யுணரத் தோன்றா  
கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும் 
வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் 
விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் 
வழங்கியன் மருங்கி னுணர்ந்தன ரொழுக்க 
னன்மதி நாட்டத் தென்மனார் புலவர்  
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே 
அஃறிணை யென்மனா ரவரல பிறவே 
யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே  
ஆடூஉ வறி சொன் மகடூஉ வறிசொற் 
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி 
யம்முப் பாற்சொ லுயர்திணை யவ்வே  
ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் 
றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே  
பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கி 
னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் 
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியுந் 
மிவ்வென அறியுமந் தந்தமக் கிலவே 
யுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்  
னஃகா னொற்றே யாடூஉ வறிசொல்  
ளஃகா னொற்றே மகடூ வறிசொல்  
ரஃகா னொற்றும் பகர விறுதியு 
மாரைக் கிளவி யுளப்பட மூன்று
நேரத் தோன்றும் பலரறி சொல்லே  
ஒன்றறி கிளவி த ற ட வூர்ந்த 
குன்றிய லுகரத் திறுதி யாகும்  
அ ஆ வ என வரூஉ மிறுதி 
யப்பான் மூன்றே பலவறி சொல்லே  
இருதிணை மருங்கி னைம்பா லறிய 
வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் 
தோற்றந் தாமே வினையொடு வருமே  
வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் 
பெயரிற் றோன்றும் பாலறி கிளவியு 
மயங்கல் கூடா தம்மர பினவே  
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி 
யாண்மை யறிசொற் காகிட னின்றே  
செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்  
வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே  
செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே 
யப்பொருள் புணர்ந்த கிளவி யான  
செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் 
கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே  
தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும் 
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே  
இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை 
வழக்கா றல்ல செய்யு ளாறே  
இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்  
செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்  
ஆக்கந் தானே காரண முதற்றே  
ஆக்கக் கிளவி காரண மின்றியும் 
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே  
பால்மயக் குற்ற வையக் கிளவி 
தானறி பொருள்வயிற் பன்மை கூறல்  
உருபென மொழியினு மஃறிணைப் பிரிப்பினு 
மிருவீற்று முரித்தே சுட்டுங் காலை  
தன்மை சுட்டலு முரித்தென மொழிப 
வன்மைக் கிளவி வேறிடத் தான  
அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை 
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்  
ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவியு 
மொன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் 
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி 
யிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல  
செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினு 
நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுந் 
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு 
மம்மூ விடத்து முரிய வென்ப  
அவற்றுள்
தருசொல் வருசொல் லாயிரு கிளவியுந் 
தன்மை முன்னிலை யாயீ ரிடத்த  
ஏனை யிரண்டு மேனை யிடத்த  
யாதெவ னென்னு மாயிரு கிளவியு 
மறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும்  
அவற்றுள்
யாதென வரூஉம் வினாவின் கிளவி 
யறிந்த பொருள்வயி னையந் தீர்தற்குத் 
தெரிந்த கிளவி யாதலு முரித்தே  
இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு 
வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்  
மன்னாப் பொருளு மன்ன வியற்றே  
எப்பொரு ளாயினு மல்ல தில்லெனி 
னப்பொரு ளல்லாப் பிறிது பொருள் கூறல்  
அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்  
பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் 
பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே  
இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் 
வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் 
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா 
ரியற்பெயர் வழிய வென்மனார் புலவர்  
முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே  
சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் 
சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும்  
சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு 
மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்  
ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி 
தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே  
தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் 
றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்  
ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் 
லொருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது  
வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்  
வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிளவார்  
எண்ணுங் காலு மதுவதன் மரபே  
இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா  
ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத் 
தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையு 
முயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்  
பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா 
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன  
பலவயி னானுமெண் ணுத்திணை விரவுப்பெய 
ரஃறிணை முடிபின செய்யு ளுள்ளே  
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் 
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென் 
றாயிரு வகைய பல பொரு ளொருசொல்  
அவற்றுள்
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் 
வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந் 
தேறத் தோன்றும் பொருடெரி நிலையே  
ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்  
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொன் 
னினையுங் காலைக் கிளந்தாங் கியலும்  
குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி  
குடிமை யாண்மை யிளமை மூப்பே 
யடிமை வன்மை விருந்தே குழுவே 
பெண்மை யரசே மகவே குழவி 
தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி 
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென் 
றாவறு மூன்று முளப்படத் தொகைஇ 
யன்ன பிறவு மவற்றொடு சிவணி 
முன்னத்தி னுணருங் கிளவி யெல்லா 
முயர்திணை மருங்கி னிலையின வாயினு 
மஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்  
கால முலக முயிரே யுடம்பே 
பால்வரை தெய்வம் வினையே பூத 
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉ 
மாயீ ரைந்தொடு பிறவு மன்ன 
வாவயின் வரூஉங் கிளவி யெல்லாம் 
பால்பிரிந் திசையா வுயர்திணை மேன  
நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே  
இசைத்தலு முரிய வேறிடத் தான  
எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே  
கண்ணுந் தோளு முலையும் பிறவும் 
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 
பன்மை கூறுங் கடப்பா டிலவே 
தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே  
வேற்றுமை தாமே யேழென மொழிப  
விளிகொள் வதன்கண் விளியொ டெட்டே  
அவைதாம்
பெயர் ஐ ஒடு கு 
இன் அது கண்விளி யென்னு மீற்ற  
அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே  
பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் 
வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் 
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் 
றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே  
பெயரி னாகிய தொகையுமா ருளவே 
யவ்வு முரிய வப்பா லான  
எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி 
யவ்விய னிலையல் செவ்வி தென்ப  
கூறிய முறையி னுருபுநிலை திரியா 
தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப  
பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா 
தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே  
இரண்டா குவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்
பவ்விரு முதலிற் றோன்று மதுவே  
காப்பி னொப்பி னூர்தியி னிழையி 
னோப்பிற் புகழிற் பழியி னென்றா 
பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் 
செறலி னுவத்தலிற் கற்பி னென்றா 
வறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி 
னிறுத்தலி னளவி னெண்ணி னென்றா 
வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி 
னோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா 
வன்ன பிறவு மம்முதற் பொருள 
வென்ன கிளவியு மதன்பால வென்மனார்  
மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே  
அதனி னியற லதற்றகு கிளவி 
யதன்வினைப் படுத லதனி னாத 
லதனிற் கோட லதனொடு மயங்க 
லதனொ டியைந்த வொருவினைக் கிளவி 
யதனொ டியைந்த வேறுவினைக் கிளவி 
யதனொ டியைந்த வொப்ப லொப்புரை 
யின்னா னேது வீங்கென வரூஉ 
மன்ன பிறவு மதன்பால வென்மனார்  
நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
யெப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே  
அதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலி 
னதற்குப்படு பொருளி னதுவாகு கிளவியி 
னதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாதலி 
னட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் 
றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார்  
ஐந்தா குவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
யிதனி னிற்றிது வென்னு மதுவே  
வண்ணம் வடிவே யளவே சுவையே 
தண்மை வெம்மை யச்ச மென்றா 
நன்மை தீமை சிறுமை பெருமை 
வன்மை மென்மை கடுமை யென்றா 
முதுமை யிளமை சிறத்த லிழித்தல் 
புதுமை பழமை யாக்க மென்றா 
வின்மை யுடைமை நாற்றந் தீர்தல் 
பன்மை சின்மை பற்று விடுதலென் 
றன்ன பிறவு மதன்பால வென்மனார்  
ஆறா குவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
தன்னினும் பிறிதினு மிதன திதுவெனு 
மன்ன கிளவிக் கிழமைத் ததுவே  
இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையிற் 
செயற்கையின் முதுமையின் வினையினென்றா 
கருவியிற் றுணையிற் கலத்தின் முதலி 
னொருவழி யுறுப்பிற் குழுவி னென்றா 
தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற் 
றிரிந்துவேறு படூஉம் பிறவு மன்ன 
கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி 
யாறன் பால வென்மனார் புலவர்  
ஏழா குவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி 
னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே  
கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல் 
பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ 
முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ 
வன்ன பிறவு மதன்பால வென்மனார்  
வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை 
யீற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து 
பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு 
மெல்லாச் சொல்லு முரிய வென்ப  
கரும மல்லாச் சார்பென் கிளவிக் 
குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை  
சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் 
வினைநிலை யொக்கு மென்மனார் புலவர்  
கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே  
முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை 
முதற்கண் வரினே சினைக்கை வருமே  
முதன்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை 
சினைமுன் வருத றெள்ளி தென்ப  
முதலும் சினையும் பொருள்வேறு படாஅ 
நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே  
பிண்டப் பெயரு மாயிய றிரியா 
பண்டியன் மருங்கின் மரீஇய மரபே  
ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே  
மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய 
வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி 
நோக்கோ ரனைய வென்மனார் புலவர்  
இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் 
விரண்டன் மருங்கி னேதுவு மாகும்  
அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி 
னதுவெ னுருபுகெடக் குகரம் வருமே  
தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் 
கடிநிலை யிலவே பொருள்வயி னான  
ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் 
வேற்றுமை தெரிப வுணரு மோரே  
ஓம்படைக் கிளவிக் கையு மானுந் 
தாம்பிரி விலவே தொகவரு காலை  
ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் 
கேழு மாகு முறைநிலத் தான  
குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி 
யப்பொரு ளாறற் குரித்து மாகும்,  
அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு 
மெச்ச மிலவே பொருள்வயி னான  
அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா 
துருபினும் பொருளினு மெய்தடு மாறி 
யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாந் 
திரிபிட னிலவே தெரியு மோர்க்கே  
உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி 
யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே  
இறுதியு மிடையு மெல்லா வுருபு 
நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார்  
பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலு 
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப  
ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் 
மெய்யுருபு தொகா அ விறுதி யான  
யாத னுருபிற் கூறிற் றாயினும் 
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்  
எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் 
அவ்வொடு சிவணுஞ் செய்யு ளுள்ளே 
பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே  
கு ஐ ஆ னென வரூஉ மிறுதி 
அ எனப் பிறத்த லஃறிணை மருங்கிற் 
குவ்வும் ஐயு மில்லென மொழிப  
இதன திதுவிற் றென்னுங் கிளவியு 
மதனைக் கொள்ளும் பொருள்வயி னானு 
மதனாற் செயற்படற் கொத்த கிளவியு 
முறைக்கொண்டெழுந்த பெயர்ச்சொற்கிளவியும் 
பால்வரை கிளவியும் பண்பி னாக்கமுங் 
காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் 
பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு 
மன்ன பிறவு நான்க னுருபிற் 
றொன்னெறி மரபின தோன்ற லாறே  
ஏனை யுருபு மன்ன மரபின 
மான மிலவே சொன்முறை யான  
வினையே செய்வது செயப்படு பொருளே 
நிலனே காலங் கருவி யென்றா 
வின்னதற் கிதுபய னாக வென்னு 
மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ 
யாயெட் டென்ப தொழின்முத னிலையே  
அவைதாம்
வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்  
முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ் 
சினையிற் கூறு முதலறி கிளவியும் 
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு 
மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும் 
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ 
யனைமர பினவே யாகுபெயர்க் கிளவி  
அவைதாம்
தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு 
மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு 
மப்பண் பினவே நுவலுங் காலை  
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்  
அளவு நிறையு மவற்றொடு கொள்வழி 
யுளவென மொழிப வுணர்ந்திசி னோரே  
கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் 
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே  
விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு 
தெளியத் தோன்று மியற்கைய வென்ப  
அவ்வே
இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப  
அவைதாம்
இ உ ஐ ஓ வென்னு மிறுதி 
யப்பா னான்கே யுயர்திணை மருங்கின் 
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே  
அவற்றுள்
இ ஈ யாகும் ஐயா யாகும்  
ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்  
உகரந் தானே குற்றிய லுகரம்  
ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற் 
றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர்  
அளபெடை மிகூஉ மிகர விறுபெய 
ரியற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப  
முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி 
யாவொடு வருதற் குரியவு முளவே  
அண்மைச் சொல்லே யியற்கை யாகும்  
னரலள வென்னு மந்நான் கென்ப 
புள்ளி யிறுதி விளிகொள் பெயரே  
ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா  
அவற்றுள்
அன்னெ னிறுதி யாவா கும்மே  
அண்மைச் சொல்லிற் ககர மாகும்  
ஆனெ னிறுதி யியற்கை யாகும்  
தொழிலிற் கூறு மானெ னிறுதி 
யாயா கும்மே விளிவயினான  
பண்புகொள் பெயரு மதனோ ரற்றே  
அளபெடைப் பெயரே யளபெடை யியல  
முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே  
தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் 
யானென் பெயரும் வினாவின் பெயரு 
மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே  
ஆரு மருவு மீரொடு சிவணும்  
தொழிற்பெய ராயி னேகாரம் வருதலும் 
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே  
பண்புகொள் பெயரு மதனோ ரற்றே  
அளபெடைப் பெயரே யளபெடை யியல  
சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன  
நும்மின் றிரிபெயர் வினாவின் பெயரென் 
றம்முறை யிரண்டு மவற்றியல் பியலும்  
எஞ்சிய விரண்டி னிறுதிப் பெயரே 
நின்ற வீற்றய னீட்டம் வேண்டும்  
அயனெடி தாயி னியற்கை யாகும்  
வினையினும் பண்பினு 
நினையத் தோன்று மாளெ னிறுதி 
யாயா கும்மே விளிவயி னான  
முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல  
சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரு 
முற்கிளந் தன்ன வென்மனார் புலவர்  
அளபெடைப் பெயரே யளபெடை யியல  
கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர் 
விளம்பிய நெறிய விளிக்குங் காலை  
புள்ளியு முயிரு மிறுதி யாகிய 
வஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் 
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றிற் 
றெளிநிலை யுடையவே காரம் வரலே  
உளவெனப் பட்ட வெல்லாப் பெயரு 
மளபிறந் தனவே விளிக்குங் காலைச் 
சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான  
அம்ம வென்னு மசைச்சொன் னீட்ட 
யம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் 
விளியொடு கொள்ப தெளியு மோரே  
தநநுஎ என வவைமுத லாகித் 
தன்மை குறித்த னரளவெ னிறுதியு
மன்ன பிறவும் பெயர்நிலை வரினே 
யின்மை வேண்டும் விளியொடு கொளலே  
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே  
பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் 
சொல்லி னாகு மென்மனார் புலவர்  
தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் தோன்றலு 
மிருபாற் றென்ப பொருண்மை நிலையே  
சொல்லெனப் படுப பெயரே வினை என் 
றாயிரண் டென்ப வறிந்திசி னோரே  
இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு 
மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப  
அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை 
யுயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு 
மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு 
மம்மூ வுருபின தோன்ற லாறே  
இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு 
முரியவை யுரிய பெயர்வயி னான  
அவ்வழி
அவனிவ னுவனென வரூஉம் பெயரு 
மவளிவ ளுவளென வரூஉம் பெயரு 
மவரிவ ருவரென வரூஉம் பெயரும் 
யான்யாம் நாமென வரூஉம் பெயரும் 
யாவன் யாவள் யாவ ரென்னு 
மாவயின் மூன்றொ டப்பதி னைந்தும் 
பாலறி வந்த வுயர்திணைப் பெயரே  
ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் 
பெண்மை யடுத்த மகளென் கிளவியும் 
பெண்மை யடுத்த விகர விறுதியு 
நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமு 
முறைமை சுட்டா மகனு மகளு 
மாந்தர் மக்க ளென்னும் பெயரு 
மாடூஉ மகடூஉ வாயிரு பெயருஞ் 
சுட்டுமுத லாகிய வன்னு மானு 
மவைமுத லாகிய பெண்டென்  கிளவியு 
மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ 
யப்பதி னைந்து மவற்றோ ரன்ன  
எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியு 
மெல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியு 
பெண்மை யடுத்த மகனென் கிளவியு 
மன்ன வியல வென்மனார் புலவர்  
நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே 
வினைப்பெய ருடைப்பெயர் பண்புகொள் பெயரே 
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே 
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே 
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே 
கூடிவரு வழக்கி னாடியற் பெயரே 
யின்றிவ ரென்னு மெண்ணியற் பெயரொ 
டன்றி யனைத்து மவற்றியல் பினவே  
அன்ன பிறவு முயர்திணை மருங்கிற் 
பன்மையு மொருமையும் பாலறி வந்த 
வென்ன பெயரு மத்திணை யவ்வே  
அதுவிது வுதுவென வரூஉம் பெயரு 
மவைமுத லாகிய வாய்தப் பெயரு 
மவைஇவை யுவையென வரூஉம் பெயரு 
மவைமுத லாகிய வகரப் பெயரும் 
யாதுயா யாவை யென்னும் பெயரு 
மாவயின் மூன்றொ டப்பதி னைந்தும் 
பாலறி வந்த வஃறிணைப் பெயரே  
பல்ல பலசில வென்னும் பெயரு 
முள்ள வில்ல வென்னும் பெயரும் 
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரு 
மினைத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரு
மொப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட 
வப்பா லொன்பது மவற்றோ ரன்ன  
கள்ளொடு சிவணு மவ்வியற்பெயரே 
கொள்வழி யுடைய பலவறி சொற்கே  
அன்ன பிறவு மஃறிணை மருங்கிற் 
பன்மையு மொருமையும் பாலறி வந்த 
வென்ன பெயரு மத்திணை யவ்வே  
தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய 
ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே  
இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையிற்
றிரிபுவேறு படூஉ மெல்லாப் பெயரு 
நினையுங் காலைத் தத்த மரபின் 
வினையொ டல்லது பாறெரி பிலவே  
நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியி
னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே 
யன்ன மரபின் வினைவயி னான  
இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே 
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே 
யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து 
சொல்லிய வல்ல பிறவு மா அங் 
கன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே  
அவற்றுள்
நான்கே யியற்பெயர் நான்கே சினைப்பெயர் 
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே 
முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே 
யேனைப் பெயரே தத்த மரபின  
அவைதாம்
பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் 
பன்மை யியற்பெய ரொருமை யியற்பெயரென் 
றந்நான் கென்ப வியற்பெயர் நிலையே  
பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர் 
பன்மைச் சினைப்பெய ரொருமைச் சினைப்பெய ரென் 
றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே  
பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே 
யாண்மை சுட்டிய சினைமுதற் பெயரே 
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே 
யொருமை சுட்டிய சினைமுதற்பெய ரென் 
றந்நான் கென்ப சினைமுதற் பெயரே  
பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்பெயரென் 
றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே  
பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரு 
மொன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே  
ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரு 
மொன்றற்கு மொருவற்கும் மொன்றிய நிலையே  
பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றே பலவே யொருவ ரென்னு
மென்றிப் பாற்கு மோரன் னவ்வே  
ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரு 
மொன்றற்கு மொருவர்க்கு மொன்றிய நிலையே  
தாமென் கிளவி பன்மைக் குரித்தே  
தானென் கிளவி யொருமைக் குரித்தே  
எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி 
பல்வழி நுதலிய நிலைத் தாகும்மே  
தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல 
துயர்திணை மருங்கி னாக்க மில்லை  
நீயிர் நீயென வரூஉங் கிளவி 
பாறெரி பிலவே யுடன் மொழிப் பொருள  
அவற்றுள்
நீயென் கிளவி யொருமைக் குரித்தே  
ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே  
ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி 
யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை  
தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்  
இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் 
முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்  
மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி 
மகடூஉ வியற்கை தொழில்வயி னான  
ஆவோ வாகும் பெயருமா ருளவே 
யாயிட னறிதல் செய்யு ளுள்ளே  
இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கு 
மியற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா 
நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான  
திணையொடு பழகிய பெயர் அலங்கடையே  
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது 
நினையும் காலைக் காலமொடு தோன்றும்  
காலந் தாமே மூன்றென மொழிப  
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா 
வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு 
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே  
குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக் 
காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லா 
முயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு 
மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு 
மம்மூ வுருபின தோன்ற லாறே  
அவைதாம்
அம்மா மெம்மே மென்னுங் கிளவியு 
மும்மொடு வரூஉங் கடதற வென்னு 
மந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும் 
பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே  
கடதற வென்னு 
மந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ
டென்னே னல்லென வரூஉ மேழுந் 
தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே  
அவற்றுள்
செய்என் கிளவி வினையொடு முடியினு 
மவ்விய றிரியா தென்மனார் புலவர்  
அன் ஆன் அள் ஆ ளென்னு நான்கு 
மொருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே  
அர் ஆர் பஎன வரூஉ மூன்றும் 
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே  
மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை 
காலக் கிளவியொடு முடியு மென்ப  
பன்மையு மொருமையும் பால்றி வந்த 
வந்நா லைந்து மூன்றுதலை யிட்ட 
முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே  
அவற்றுள்
பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி 
யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே  
யா அ ரென்னும் வினாவின் கிளவி 
யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே  
பாலறி மரபி னம்மூ வீற்று 
மாவோ வாகுஞ் செய்யு ளுள்ளே  
ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும்  
அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானுங் 
கண்ணென் வேற்றுமை நிலத்தி னானு 
மொப்பி னானும் பண்பி னானுமென் 
றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்  
அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையி 
னன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளு 
மென்ன கிளவியுங் குறிப்பே காலம்  
பன்மையு மொருமையும் பாலறி வந்த 
வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் 
காலக் கிளவி யுயர்திணை மருங்கின் 
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே  
அ ஆ வஎன வரூஉ மிறுதி 
யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை  
ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த 
குன்றிய லுகரத் திறுதி யாகும்  
பன்மையு மொருமையும் பாலறி வந்த 
வம்மூ விரண்டு மஃறிணை யவ்வே  
அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கு 
மொக்கு மென்ப வெவனென் வினாவே  
இன்றில வுடைய வென்னுங் கிளவியு 
மன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் 
பண்புகொள் கிளவியு முளவென் கிளவியும் 
பண்பி னாகிய சினைமுதற் கிளவியு 
மொப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ 
யப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்  
பன்மையு மொருமையும் பாலறி வந்த 
வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் 
காலக் கிளவி யஃறிணை மருங்கின் 
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே  
முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி 
யின்மை செப்பல் வேறென் கிளவி 
செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னு 
மம்முறை நின்ற வாயெண் கிளவியும் 
திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி 
யிருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய  
அவற்றுள்
முன்னிலைக் கிளவி 
இ ஐ ஆயென வரூஉ மூன்று 
மொப்பத் தோன்று மொருவர்க்கும் மொன்றற்கும்  
இர் ஈர் மின்னென வரூஉ மூன்றும் 
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் 
சொல்லோ ரனைய வென்மனார் புலவர்  
எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி 
யைம்பாற்கு முரிய தோன்ற லாறே  
அவற்றுள்
முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு 
மன்னா தாகும் வியங்கோட் கிளவி  
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை 
யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் 
செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா  
செய்து செய்யூ செய்பு செய்தெனச் 
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென 
வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி  
பின்முன் கால்கடை வழியிடத் தென்னு 
மன்ன மரபிற் காலங் கண்ணிய 
வென்ன கிளவியு மவற்றியல் பினவே  
அவற்றுள்
முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின  
அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் 
சினையொடு முடியா முதலொடு முடியினும் 
வினையோ ரனைய வென்மனார் புலவர்  
ஏனை யெச்சம் வினைமுத லானு 
மான்வந் தியையும் வினைநிலை யானும் 
தாமியன் மருங்கின் முடியு மென்ப  
பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி 
சொன்முறை முடியா தடுக்குந வரினு 
முன்னது முடிய முடியுமன் பொருளே  
நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் 
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட 
வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய 
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே  
அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி 
முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே  
பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியு 
மெதிர் மறுத்து மொழியினும் பொருணிலை திரியா  
தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி 
னெச்சொல் லாயினு மிடைநிலை வரையார்  
அவற்றுள்
செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு 
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர 
மவ்விட னறித லென்மனார் புலவர்  
செய்தெ னெச்சத் திறந்த கால 
மெய்திட னுடைத்தே வாராக் காலம்  
முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை 
யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து 
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்  
வாராக் காலத்து நிகழுங் காலத்து
மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி 
யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் 
விரைந்த பொருள வென்மனார் புலவர்  
மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி 
யப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி 
செய்வ தில்வழி நிகழுங் காலத்து 
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே  
இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி 
யிருவயி னிலையும் பொருட்டா கும்மே 
தன்பா லானும் பிறன்பா லானும்  
வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொ 
லெதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே  
வாராக் காலத்து வினைச்சொற் கிளவி 
யிறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்று 
மியற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை  
செயப்படு பொருளைச் செய்தது போலத் 
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே  
இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் 
சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி  
ஏனைக் காலமு மயங்குதல் வரையார்  
இடையெனப் படுப பெயரொடும் வினையொடு 
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே  
அவைதாம்
புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும் 
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும் 
வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவு 
மசைநிலைக் கிளவி யாகி வருநவு 
மிசைநிறைக் கிளவி யாகி வருநவுந் 
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவு 
மொப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென் 
றப்பண் பினவே நுவலுங் காலை  
அவைதாம்
முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந் 
தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலு 
மன்னவை யெல்லா முரிய வென்ப  
கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென் 
றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே  
விழைவே கால மொழியிசைக் கிளவியென் 
றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே  
அச்சம் பயமிலி காலம் பெருமையென் 
றப்பா னான்கே கொன்னைச் சொல்லே  
எச்சம் சிறப்பே யைய யெதிர்மறை 
முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் 
றப்பா லெட்டே யும்மைச் சொல்லே  
பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை 
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ 
யிருமூன் றென்ப வோகா ரம்மே  
தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே 
யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே  
வினையே குறிப்பே யிசையே பண்பே 
யெண்ணே பெயரொ டவ்வறு கிளவியுங்
கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி  
என்றென் கிளவியு மதனோ ரற்றே  
விழைவின் றில்லை தன்னிடத் தியலும்  
தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு 
மளபி னெடுத்த விசைய வென்ப  
மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை 
யப்பா லிரண்டென மொழிமனார் புலவர்  
எற்றென் கிளவி யிறந்த பொருட்டே  
மற்றைய தென்னுங் கிளவி தானே 
சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே  
மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்  
தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே  
அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென் 
றாயிரண் டாகு மியற்கைத் தென்ப  
கொல்லே யையம்  
எல்லே யிலக்கம்  
இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி 
பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே  
அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல்  
ஏயுங் குரையு மிசைநிறை யசைநிலை 
யாயிரண் டாகு மியற்கைய வென்ப  
மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்  
மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னு 
மாவயி னாறு முன்னிலை யசைச்சொல்  
அவற்றுள்
இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந் 
தகுநிலை யுடைய வென்மனார் புலவர்  
அம்மகேட் பிக்கும்  
ஆங்க வுரையசை  
ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்  
யாகா 
பிறபிறக் கரோபோ மாதென வரூஉ 
மாயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி  
ஆக வாக லென்ப தென்னு 
மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை  
ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே 
யாயிய னிலையுங் காலத் தானு
மளபெடை நிலையுங் காலத் தானும் 
மளபெடை யின்றித் தான்வருங் காலையு 
முளவென மொழிப பொருள்வேறு படுதல் 
குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும்  
நன்றீற் றேயு மன்றீற் றேயு 
மந்தீற் றோவு மன்னீற் றோவு 
மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்  
எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுந்
தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே  
எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் 
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்  
முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கி 
னெச்சக் கிளவி யுரித்து மாகும்  
ஈற்றுநின் றிசைக்கு மேயெ னிறுதி 
கூற்றுவயி னோரள பாகலு முரித்தே  
உம்மை யெண்ணு மெனவெ  னெண்ணுந் 
தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே  
எண்ணே கார மிடையிட்டுக் கொளினு 
மெண்ணுக்குறி தியலு மென்மனார் புலவர்  
உம்மை தொக்க வெனாவென் கிளவியு 
மாவீ றாகிய வென்றென் கிளவியு 
மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன  
அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் 
பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியு 
மேயி னாகிய வெண்ணி னிறுதியும் 
யாவயின் வரினுந் தொகையின் றியலா  
உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார்  
உம்முந் தாகு மிடனுமா ருண்டே  
வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா 
நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே  
என்று மெனவு மொடுவுந் தோன்றி 
யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே  
அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென 
மெய்பெறக் கிளந்த வியல வாயினும் 
வினையொடும் பெயரொடு நினையத் தோன்றித் 
திரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே  
கிளந்த அல்ல வேறுபிற தோன்றினுங் 
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே  
உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை 
யிசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் 
பெயரினும் வினையினு மெய்தடு மாறி 
யொருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் 
பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும் 
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் 
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கி 
னெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்  
வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா 
வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன  
அவைதாம்
உறுதவ நனியென வரூஉ மூன்று 
மிகுதி செய்யும் பொருள வென்ப  
உருவுட் காகும் புரையுயர் பாகும்  
குருவுங் கெழுவு நிறனா கும்மே  
செல்ல லின்ன லின்னா மையே  
மல்லல் வளனே ஏபெற் றாகும்  
உகப்பே யுயர்த லுவப்பே யுவகை  
பயப்பே பயனாம்  
பசப்புநிற னாகும்  
இயைபே புணர்ச்சி  
இசைப்பிசை யாகும்  
அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி  
மழவுங் குழவு மிளமைப் பொருள  
சீர்த்தி மிகுபுகழ் மாலை யியல்பே  
கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்  
கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள  
அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும்  
வார்தல் போக லொழுகன் மூன்று 
நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள  
தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்  
கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு  
தடவுங் கயவு நளியும் பெருமை  
அவற்றுள்
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்  
கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்  
நளியென் கிளவி செறிவு மாகும்  
பழுதுபய மின்றே  
சாயன் மென்மை  
முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே  
வம்புநிலை யின்மை  
மாதர் காதல்  
நம்பு மேவு நசையா கும்மே  
ஓய்த லாய்த னிழத்தல் சாஅ 
யாவயி னான்கு முள்ளத னுணுக்கம்  
புலம்பே தனிமை  
துவன்  றுநிறை வாகும்  
முரஞ்சன் முதிர்வே  
வெம்மை வேண்டல்  
பொற்பே பொலிவு  
வறிதுசிறி தாகும்  
எற்ற நினைவுந் துணிவு மாகும்  
பிணையும் பேணும் பெட்பின் பொருள  
பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்  
படரே யுள்ளல் செலவு மாகும்  
பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள  
எய்யா மையே யறியா மையே  
நன்றுபெரி தாகும்  
தாவே வலியும் வருத்தமு மாகும்  
தெவுக்கொளற் பொருட்டே  
தெவ்வுப்பகை யாகும்  
விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே  
அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும்  
கம்பலை சும்மை கலியே யழுங்க 
லென்றிவை நான்கு மரவப் பொருள  
அவற்றுள்
அழுங்க லிரக்கமுங் கேடு மாகும்  
கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்  
செழுமை வளனுங் கொழுப்பு மாகும்  
விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும்  
கருவி தொகுதி  
கமநிறைந் தியலும்  
அரியே யைம்மை  
கவவகத் திடுமே  
துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு 
மிசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர்  
அவற்றுள்
இரங்கல் கழிந்த பொருட்டு மாகும்  
இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை  
ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள  
கவர்வுவிருப் பாகும்  
சேரே திரட்சி  
வியலென் கிளவி யகலப் பொருட்டே  
பேநா முருமென வரூஉங் கிளவி 
யாமுறை மூன்று மச்சப் பொருள  
வயவலி யாகும்  
வாளொளி யாகும்  
துயவென் கிளவி யறிவின் றிரிபே  
உயாவே யுயங்கல்  
உசாவே சூழ்ச்சி  
வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்  
கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள  
நிறத்துரு உணர்த்தற்கு முரிய வென்ப  
நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை  
புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே  
நனவே களனு மகலமுஞ் செய்யும்  
மதவே மடனும் வலியு மாகும்  
மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே  
புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி  
அமர்தன் மேவல்  
யாணுக் கவினாம்  
பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள  
கடியென் கிளவி 
வரைவே கூர்மை காப்பே புதுமை 
விரைவே விளக்க மிகுதி சிறப்பே 
யச்ச முன்தேற் றாயீ ரைந்து 
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே  
ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே  
ஐவியப் பாகும்  
முனைவுமுனி வாகும்  
வையே கூர்மை  
எறுழ்வலி யாகும்  
மெய்பெறக் கிளந்த வுரிச்சொல் லெல்லா
முன்னும் பின்னும் வருபவை நாடி 
யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த 
றத்த மரபிற் றோன்றுமன் பொருளே  
கூறிய கிளவிப் பொருணிலை யல்ல 
வேறுபிற தோன்றினு மவற்றொடுங் கொளலே  
பொருட்குப் பொரு டெரியின துவரம் பின்றே  
பொருட்குத்திரி பில்லை யுணர்த்த வல்லின்  
உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே  
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா  
எழுத்துப்பிரிந் திசைத்த லிவணியல் பின்றே  
அன்ன பிறவுங் கிளந்த வல்ல 
பன்முறை யானும் பரந்தன வரூஉ 
முரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட 
வியன்ற மருங்கி னினைத்தென வறியும் 
வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் 
தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் 
பாங்குற வுணர்த லென்மனார் புலவர்  
இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென்  
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே 
அவற்றுள்
இயற்சொற் றாமே 
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் 
தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே 
ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் 
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு 
மிருபாற் றென்ப திரிசொற் கிளவி 
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் 
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி 
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ 
யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே  
சிதைந்தன வரினு மியைந்தன வரையார் 
அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை 
வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும் 
விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலு 
நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலு 
நாட்டல் வலிய வென்மனார் புலவர் 
நிரனிநிறை சுண்ண மடிமறி மொழிமாற் 
றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே  
அவற்றுள்
நிரனிறை தானே 
வினையினும் பெயரினு நினையத் தோன்றி 
சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்  
சுண்ணந் தானே 
பட்டாங் கமைந்த வீர்டி யெண்சீ 
ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல் 
அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து 
சீர்நிலை திரியாது தடுமா றும்மே  
பொருடெரி மருங்கி 
னீற்றடி யிறுசீ ரெருத்துவயிற் றிரியுந் 
தோற்றமும் வரையா ரடிமறி யான  
மொழிமாற் றியற்கை 
சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய 
முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்  
த ந நு எ எனு மவைமுத லாகிய 
கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா  
இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் 
றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே  
வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே 
வினையின் றொகையே பண்பின் றொகையே 
யும்மைத்தொகையே யன்மொழித் தொகையென் 
றவ்வா றென்ப தொகைமொழி நிலையே  
அவற்றுள்
வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல  
உவமத் தொகையே உவம வியல  
வினையின் றொகுதி காலத் தியலும்  
வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென் 
றன்ன பிறவு மதன்குண நுதலி 
யின்ன திதுவென வரூஉ மியற்கை 
யென்ன கிளவியும் பண்பின் றொகையே 
இருபெயர் பல்பெய ரளவின் பெயரே 
யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி 
யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் 
கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே  
பண்புதொக வரூஉங் கிளவி யானு 
மும்மை தொக்க பெயர்வயி னானும் 
வேற்றுமை தொக்க பெயர்வயி னானு 
மீற்றுநின் றியலு மன்மொழித் தொகையே  
அவைதாம்
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு
மிருமொழி மேலு மொருங்குட னிலையலு 
மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு
மந்நான் கென்ப பொருணிலை மரபே 
எல்லாத் தொகையு மொருசொன் னடைய 
உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே 
பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர்  
வாரா மரபின வரக்கூ றுதலு 
மென்னா மரபின வெனக்கூ றுதலு 
மன்னவை யெல்லா மவற்றவற் றியல்பா 
னின்ன வென்னுங் குறிப்புரை யாகும் 
இசைப்படு பொருளே நான்கு வரம் பாகும்  
விரைசொல் வடுக்கே மூன்றுவரம் பாகும்  
கண்டீ ரென்றா கொண்டீ ரென்றா 
சென்ற தென்றா போயிற் றென்றா 
வன்றி யனைத்தும் வினாவொடு சிவணி 
நின்றவழி யசைக்குங் கிளவி யென்ப 
கேட்டை யென்றா நின்றை யென்றா 
காத்தையென்றா கண்டை யென்றா 
வன்றி யனைத்து முன்னிலை யல்வழி 
முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே  
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் 
சிறப்புடை மரபி னம்முக் காலமுந் 
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு 
மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு 
மெய்ம்மை யானு மிவ்விரண் டாகு 
மவ்வா றென்ப முற்றியன் மொழியே  
எவ்வயின் வினையு மவ்விய னிலையும்  
அவைதாம்
தத்தங் கிளவி யடுக்குந வரினு 
மெத்திறத் தானும் பெயர்முடி பினவே 
பிரிநிலை வினையே பெயரே யொழியிசை 
யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே 
குறிப்பே யிசையே யாயீ ரைந்து 
நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி  
அவற்றுள்
பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின 
வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு 
நினையத் தோன்றிய முடிபா கும்மே 
யாவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே 
பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே 
ஒழியிசை யெச்ச மொழியிசை முடிபின 
எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின  
உம்மை யெச்ச மிருவீற் றானுந் 
தன்வினை யொன்றிய முடிபா கும்மே 
தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை 
நிகழுங் காலமொடு வாராக் காலமு 
மிறந்த காலமொடு வாராக் காலமு 
மயங்குதல் வரையார் முறைநிலை யான  
எனவெ னெச்சம் வினையொடு முடிமே 
எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு 
மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப  
அவைதாம் தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும் 
சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ் 
சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே  
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் 
மறைக்குங் காலை மரீஇய தொரா அல் 
ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று 
மிரவின் கிளவி யாகிட னுடைய 
அவற்றுள்
ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே  
தாவென் கிளவி யொப்போன் கூற்றே 
கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே  
கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் 
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற் 
றன்னிடத் தியலு மென்மனார் புலவர் 
பெயர்நிலைக் கிளவியி னாஅ குநவுந் 
திசைநிலை கிளவியி னாஅ குநவுந் 
தொன்னெறி மொழிவயி னாஅ குநவு
மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு 
மந்திரப் பொருள்வயி னாஅ குநவு 
மன்றி யனைத்துங் கடப்பா டிலவே 
செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற் 
செய்யென் கிளவி யாகிட னுடைத்தே  
முன்னிலை முன்ன ரீயு மேயு 
மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே 
கடிசொல் லில்லைக் காலத்துப் படினே 
குறைச்சொற் கிளவி குறைக்கும் வழியறிதல்  
குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல 
இடைச்சொல்லெல்லாம் வேற்றுமைச்சொல்லே  
உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய 
வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய  
உரையிடத் தியலு முடனிலை யறிதல்  
முன்னத்தி னுணருங் கிளவியு முளவே 
யின்ன வென்னுஞ் சொன்முறை யான 
ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்  
ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி 
பன்மைக் காகு மிடனுமா ருண்டே 
முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி 
பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே 
யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்  
செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினு 
மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் 
பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது 
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல் 
கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் 
முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப
அவற்றுள் 
நடுவ ணைந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே
முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை
முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி 
னியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே
மாயோன் மேய காடுறை யுலகமுஞ்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம் புன லுலகமும் 
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் 
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
காரு மாலையு முல்லை குறிஞ்சி
கூதிர் யாம மென்மனார் புலவர்
பனியெதிர் பருவமு முரித்தென மொழிப
வைகுறு விடியன் மருத மெற்பாடு
நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும்
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு 
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானு முரித்தென மொழிப
இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றினு
முரிய தாகு மென்மனார் புலவர்
திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே 
நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப 
புலனன் குணர்ந்த புலமை யோரே
உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே
புணர்தல் பிரித லிருத்த லிரங்க
லூட லிவற்றி னிமித்த மென்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே
கொண்டுதலைக் கழியினும் பிரிந்தவ ணிரங்கினு
முண்டென மொழிப வோரிடத் தான
கலந்த பொழுதுங் காட்சியு மன்ன
முதலெனப் படுவ தாயிரு வகைத்தே
தெய்வ முணாவே மாமரம்  புட்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப
எந்நில மருங்கிற் பூவும் புள்ளு
மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் 
வந்த நிலத்தின் பயத்த வாகும்
பெயரும் வினையுமென் றாயிரு வகைய 
திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே
ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெய 
ராவயின் வரூஉங் கிழவரு முளரே
ஏனோர் பாங்கினு மெண்ணுங் காலை
யானா வகைய திணைநிலைப் பெயரே
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்
ஏவன் மரபி னேனோரு முரிய
ராகிய நிலைமை யவரு மன்னர்
ஓதல் பகையே தூதிவை பிரிவே
அவற்றுள் 
ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன
தானே சேறலுந் தன்னொடு சிவணிய
வேனோர் சேறலும் வேந்தன் மேற்றே
மேவிய சிறப்பி னோனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியு
மிழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே
மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே
மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப
உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான
வேந்து வினை யியற்கை வேந்தனி னொரீஇய
வேனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே
பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே
யுயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான
முந்நீர் வழக்க மகடூஉவொ டில்லை
எத்திணை மருங்கினு மகடூஉ மடன்மேற்
பொற்புடை நெறிமை யின்மை யான
தன்னு மவனு மவளுஞ் சுட்டி
மன்னு நிமித்த மொழிப்பொரு டெய்வ
நன்மை தீமை யச்சஞ் சார்தலென்
றன்ன பிறவு மவற்றொடு தொகைஇ
முன்னிய கால மூன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலு
மாகிய கிளவியு மவ்வழி யுரிய
ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயரு முளரே
அயலோ ராயினு மகற்சி மேற்றே
தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணு
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்ம்மையுங் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினு
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை
யழிந்தது களைஇய  வொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தொ
டென்றிவை யெல்லா மியல்புற நாடி
னொன்றித் தோன்றுந் தோழி மேன
பொழுது மாறு முட்குவரத் தோன்றி
வழுவி னாகிய குற்றங் காட்டலு
மூரது சார்வுஞ் செல்லுந் தேயமு
மார்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும்
புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொ
டழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத்
தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ்
சேய்நிலைக் குகன்றோர் செலவினும் வரவினுங்
கண்டோர் மொழிதல் கண்டதென்ப
ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்து
மொன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினு
மிடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
வப்பாற் பட்ட வொரு திறத் தானு
நாளது சின்மையு மிளமைய தருமையுந்
தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும்
மின்மைய திளிவு முடைமைய துயர்ச்சியு
மன்பின தகலமு மகற்சிய தருமையு
மொன்றாப் பொருள்வயி னூக்கிய பாலினும்
வாயினும் கையினும் வகுத்த பக்கமொ
டூதியங் கருதிய வொருதிறத் தானும்
புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுந்
தூதுடை யிட்ட வகையி னானு
மாகித் தோன்றும் பாங்கோர் பாங்கினு
மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையுந்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினுங்
காவற் பாங்கி னாங்கோர் பக்கமும்
பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி
யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையொ
டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன
எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே
நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்
நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவு மென்ப
உள்ளுறை யுவம மேனை யுவமெனத்
தள்ளா தாகுந் திணையுணர் வகையே
உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே
வுள்ளுறுத் திதனொ டொத்துப் பொருண் முடிகென
வுள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம்
ஏனை யுவமந் தானுணர் வகைத்தே
காமஞ் சாலா விளமை யோள்வயி
னமஞ் சாலா விடும்பை யெய்தி
நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற்
றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே
ஏறிய மடற்றிற மிளமை தீர்திறந்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிறு 
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே
முன்னைய நான்கும் முன்னதற் கென்ப
நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கங்
கலியே பரிபாட் டாயிரு பாங்கினு
முரிய தாகு மென்மனார் புலவர்
மக்க ணுதலிய வகனைந் திணையுஞ்
சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்
புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல
தகத்திணை மருங்கி னளவுத லிலவே
அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர்
புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
யுட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே 
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவி
னாதந் தோம்பன் மேவற் றாகும்
படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
வொற்றி னாகிய வேயே வேய்ப்புற
முற்றி னாகிய புறத்திறை முற்றிய
வூர்கொலை யாகோள்  பூசன் மாற்றே
நோயின் றுய்த்த னுவல்வழித் தோற்றந்
தந்துநிறை பாதீ டுண்டாட்டு கொடையென
வந்த வீரேழ் வகையிற் றாகும்
மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையு மத்திணைப் புறனே
வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளு முறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப்
போந்தை வேம்பே யாரென வரூஉ
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவ ரேத்திய
வோடாக் கழனிலை யுளப்பட வோடா
வுடல்வேந் டுக்கிய வுன்ன நிலையு
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையு
மாரம ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ்
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந்
தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலு
மனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்
றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங்
காட்சி கால்கோ ணீர்ப்படை  நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே
வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்த
னஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே
இயங்கு படை யரவ மெரிபரந் தெடுத்தல்
வயங்க லெய்திய பெருமை யானுங்
கொடுத்த லெய்திய கொடைமை யானு
மடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானு
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
வொருவன் றாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங்
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையு
மழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே
உழிஞை தானே மருதத்துப் புறனே
முழுமுத லரண முற்றலுங் கோடலு
மனைநெறி மரபிற் றாகு மென்ப
அதுவே தானு மிருநால் வகைத்தே
கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமு
முள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புந்
தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமு
மகத்தோன் செல்வமு மன்றி முரணிய
புறத்தோ னணங்கிய பக்கமுந் திறப்பட
வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர்
வருபகை பேணா ராரெயி லுளப்பட
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே
குடையும் வாளு நாள்கோ ளன்றி
மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச்
சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு
முற்றிய முதிர்வு மன்றி முற்றிய
வகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானு
நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன்
றூர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனு
மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமு மிகன்மதிற்
குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்
வென்ற வாளின் மண்ணொ டொன்றத்
தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப
தும்பைதானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப
கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்
சென்ற வுயிரி னின்ற யாக்கை
யிருநிலந் தீண்டா வரு நிலை வகையொ
டிருபாற் பட்ட வொருசிறப் பின்றே
தானை யானை குதிரை யென்ற
நோனா ருட்கு மூவகை நிலையும்
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன்
றான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியு
யிருவர் தலைவர் தபுதிப் பக்கமு
மொருவ னொருவனை யுடைபடை புக்குக்
கூழை தாங்கிய வெருமையும் படையறுத்து
பாழி கொள்ளு மேமத் தானுங்
களிளெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்
திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமு
மொருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ்
செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
யொருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை யொருவற் குடைதலின் மற்றவ
னொள்வாள் வீசிய நூழிலு முளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே
வாகைதானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த என்ப
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமு
மைவகை மரபி னரசர் பக்கமு
மிருமூன்று மரபி னேனோர் பக்கமு
மறுவில் செய்தி மூவகைக் காலமு
நெறியி னாற்றிய வறிவன் தேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணு
மனைநிலை வகையொ டாங்கெழு வகையிற்
றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்
கூதிர்வேனி லென்றிரு பாசறைக்
காதலி னொன்றிக் கண்ணிய மரபினு
மேரோர் களவழி யன்றி களவழித்
தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர்
வென்ற கோமான் முன்றேர்க் குரவையு
மொன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும்
பெரும்பகை தாங்கும் வேலி னானு
மரும் பகை தாங்கு மாற்ற லானும்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமு
மொல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து
தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானு
மொல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும்
பகட்டி னானு மாவி னானுந்
துகட்டபு  சிறப்பிற் சான்றோர் பக்கமுங்
கட்டி னீத்த பாலி னானுந்
மெட்டுவகை நுதலிய வவையகத் தானுங்
கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானு
மிடையில் வண்புகழ்க் கொடைமை யானு
பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்
மருளொடு புணர்ந்த வகற்சி யானுங்
காம நீத்த பாலி னானுமென்
றிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே
மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங்
கழிந்தோ ரழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியு மறத்தி னானு
மேமச் சுற்ற மின்றிப் புண்ணோற்
பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமு
மின்னனென் றிரங்கிய மன்னை யானு
மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானு
மின்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற்
றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியு
நீத்த கணவற் றீர்த்த வேலிற்
பேஎத்த மனைவி யாஞ்சி யானு
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானு
முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன்
றலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
யீரைந் தாகு மென்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற
மாய்ந்த பூசன் மயக்கத் தானுங்
தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமு
நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையுங்
கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ
யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங்
காதலி யிழந்த தபுதார நிலையும்
காதல னிழந்த தாபத நிலையு
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச்
சொல்லிடை யிட்ட பாலை நிலையு
மாய்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்த
தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையு
மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பிற் றுரையிரண் டுடைத்தே
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே
அமரர்கண் முடியு மறு வகை யானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினு
மொன்றன் பகுதி யொன்று மென்ப
வழங்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ
பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு
முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே
காமப் பகுதி கடவுளும் வரையா
ரேனோர் பாங்கினு மென்மனார் புலவர்
குழவி மருங்கினும் கிழவ தாகும்
ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யான
மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே
கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
கொற்ற வள்ளை யோரிடத் தான
கொடுப்போ ரோத்திக் கொடா அர்ப் பழித்தலு
மடுத்துர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலை யானுங்
கண்படை கண்ணிய கண்படை நிலையுங்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலை நோக்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉ
மாவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங்
கைக்கிளை வகையொ டுளப்படத் தொகைஇத்
தொக்க நான்கு முளவென மொழிப
தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையுங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு
மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ்
சிறந்த நாளணி செற்ற நீக்கி
பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமு
நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபு
மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமு
மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவள னேத்தி
நடைவயிற் றோன்று மிருவகை விடையு
மச்சமு முவகையு மெச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங்
காலங் கண்ணிய வோம்படை யுளப்பட
ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற்
கால மூன்றொடு கண்ணிய வருமே
இன்பமும் பொருளு மறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட்
டுறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே
ஒன்றே வேறே யென்றிரு பால்வயி
னொன்றி யுயர்ந்த பால தாணையி
னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே
சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப
விழிந்துழி யிழிபே சுட்ட லான
வண்டே யிழையே வள்ளி பூவே
கண்ணே யலமர லிமைப்பே யச்சமென்
றன்னவை பிறவு மாங்கவ ணிகழ
நின்றவை களையுங் கருவி யென்ப
நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்
குறிப்பே குறித்தது கொள்ளு மாயி
னாங்கவை நிகழு மென்மனார் புலவர்
பெருமையு முரனு மாடூஉ மேன
அச்சமு நாணு மடனுமுந் துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப
வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித
லாக்கஞ் செப்ப னாணுவரை யிறத்த
னோக்குவ வெல்லா மவையே போறன்
மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச்
சிறப்புடை மரபினவை களவுவென மொழிப
முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்த
னன்னய முரைத்த னகைநனி யுறாஅ
தந்நிலை யறிதன் மெலிவுவிளக் குறுத்த
றந்நிலை யுரைத்த றெளிவகப் படுத்தலென்
றின்னவை நிகழு மென்மனார் புலவர்
மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்ட
லிடம்பெற்றுத் தழாஅ லிடையூறு கிளத்த
னீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் 
தீராத் தேற்ற முளப்படத் தொகைஇப்
பேராச் சிறப்பி னிருநான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலு
நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங்
குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்
பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினு
மூரும் பேருங் கெடுதியும் பிறவு
நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி
குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலுந்
தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ்
சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினு
மறிந்தோ ளயர்ப்பி னவ்வழி மருங்கிற்
கேடும் பீடுங் கூறலுந் தோழி 
நீக்கலி னாகிய நிலைமையு நோக்கி
மடன்மா கூறு மிடனுமா ருண்டே
பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினு
மன்புற்று நகினு மவட்பெற்று மலியினு
மாற்றிடை யுறுதலு மவ்வினைக் கியல்பே
பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப
முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே
முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே
இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்துங்
காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினுங்
தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற்
காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் 
புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் 
வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும் 
தாளா ணெதிரும் பிரிவி னானு 
நாணுநெஞ்சலைப்ப விடுத்தற் கண்ணும் 
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர் கிளவி புல்லிய வெதிரும் 
வரைவுடன் படுதலு மாங்கதன் புறத்துப்
புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் 
கிழவோண் மேன வென்மனார் புலவர்
காமத் திணையிற் கண்ணின்று வரூஉ
நாணு மடனும் பெண்மைய வாதலிற்
குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை
நெறிப்பட வாரா வவள்வயி னான
காமஞ் சொல்லா நாட்ட மின்மையி
னேமுற விரண்டும் முளவென மொழிப
சொல்லெதிர் மொழித லருமைத் தாகலி
னல்ல கூற்றுமொழி யவள்வயி னான
மறைந்தவற் காண்ட றற்காட் டுறுத
னிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தன் மறுத்தெதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினு நாணுமிக வரினு
மீட்டுப்பிரி விரங்கினு மருமைசெய் தயர்ப்பினும்
வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினு
நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருந்தொழிற் கருமை வாயில் கூறினுங்
கூறிய வாயில் கொள்ளாக் காலையு
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலு
முயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல
வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணு
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
யொருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோ
ளருமை சான்ற நாலிரண்டு வகையிற்
பெருமை சான்ற வியல்பின் கண்ணும்
பொய்தலை யடுத்த மடலின் கண்ணுங்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணுங்
குறியி னொப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினுங் களவறி வுறினுந்
தமர்தற் காத்த காரண மருங்கினுந்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தனன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும்
பொழுது மாறும் புரைவ தன்மையி
னழிவுதலை வந்த சிந்தைக் கண்ணுங்
காமஞ் சிறப்பினு மவனளி சிறப்பினு
மேமஞ் சான்ற வுவகைக் கண்ணுந்
தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையு
மன்னவு முளவே யோரிடத் தான
வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினு
முரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்
தானே கூறுங் காலமு முளவே
உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் 
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந் தன்றெனத் 
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு 
காமக் கிழவ னுள்வழிப் படினுந்
தாவி னலன்மொழி கிழவி கிளப்பினு
மாவகை பிறவுந் தோன்றுமன் பொருளே
நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ்
செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉ
முணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொரு ணாட்டத் தானுங்
குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் 
பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினு
மருமையி னகற்சியு மவளறி வுறுத்துப் 
பின்வா வென்றலும் பேதைமை யூட்டலு
முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலு
மஞ்சியச் சுறுத்தலு முரைத்துழிக் கூட்டமொ 
டெஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயஞ் செப்பிப் 
பொறுத்த காரணங் குறித்த காலையும்
புணர்ந்தபி னவன்வயின் வணங்கற் கண்ணுங்
குறைந்துவட் படரினு மறைந்தவ ளருக
தன்னொடு மவளொடு முதன்மூன் றளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினு
நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினு
மெண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்
புணர்ந்துழி யுணர்ந்த வறிமடச் சிறப்பினு
மோம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ்
செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும்
மென்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ
யன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணு
மாற்றது தீமை யறிவுறு கலக்கமுங்
காப்பின் கடுமை கையற வரினுங்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதன் மிகுதி யுளப்படப் பிறவு
நாடு மூரு மில்லுங் குடியும் 
பிறப்புஞ் சிறப்பு மிறப்ப நோக்கி
யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ
யனை நிலை வகையான் வரைதல் வேண்டினு
மையச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினு
மவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும்
பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினு
முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் 
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினு
மாங்கதன் றன்மையின் வன்புறை யுளப்பட
பாங்குற வந்த நாலெட்டு வகையுந்
தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன
களவல ராயினுங் காமமெய்ப் படுப்பினு
மளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங்
கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரு
மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணு
மாடிய சென்றுழி யழிவுதலை வரினுங்
காதல் கைமிகக் கனவி னரற்றலுந்
தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும்
போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக்
கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினு
மிருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணு
மின்ன வகையிற் பதின்மூன்று கிளவியொ
டன்னவை பிறவுஞ் செவிலி மேன
தாய்க்கும் வரையா ருணர்வுடன் படினே
கிழவோ னறியா வறிவின ளிவளென
மையறு சிறப்பி னுயர்ந்தோர் பாங்கி
னையக் கிளவியி யறிதலு முரித்தே
தன்னுறு வேட்கை கிழவன் முற் கிளத்த
லெண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களி னறிய வாயிடைப்
பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப
காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலிற்
றாமே தூதுவ ராதலு முரித்தே
அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையின்
களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்
தான்செலற்குரிய வழியாக லான
தோழியின் முடியு மிடனுமா ருண்டே
முந்நா ளல்லது துணையின்று கழியா
தந்நா ளகத்து மதுவரை வின்றே
பன்னூறு வகையினுந் தன்வயின் வரூஉ
நன்னய மருங்கி னாட்டம் வேண்டலிற்
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்
துணையோர் கரும மாக லான
ஆய்பெருஞ் சிறப்பி னருமறை கிளத்தலிற்
றாயெனப் படுவோள் செவிலி யாகும்
தோழி தானே செவிலி மகளே
சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே
குறையுற வுணர்தன் முன்னுற வுணர்த
லிருவரு முள்வழி யவன்வர வுணர்தலென
மதியுடம் படுத்த லொருமூ வகைத்தே
அன்ன வகையா idணர்ந்தபி iல்லது
பின்னிலை முயற்சி பெறாளென மொழிப
முயற்சிக் காலத் அதற்பட நாடிப்
புணர்த்த லாற்றலு மவள்வயி னான
குறியெனப் படுவ திரவினும் பகலினு
மறியத் தோன்று மாற்ற தென்ப
இரவுக் குறியே யில்லகத் துள்ளு
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான
பகற்புணர் களனே புறனென மொழிப
வவளறி வுணர வருவழி யான
அல்லகுறிப் படுதலு மவள்வயி னுரித்தே
யவன்குறி மயங்கிய வமைவொடு வரினே
ஆங்காங் கொழுகு மொழுக்கமு முண்டே
யோங்கிய சிறப்பி னொருசிறை யான
மறைந்த வொழுக்கத் தோரையு நாளுந்
துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை
ஆறின தருமையு மழிவு மச்சமும்
மூறு முளப்பட வதனோ ரன்ன
தந்தையுந் தன்னையு முன்னத்தி னுணர்ப
தாயறி வுறுதல் செவிலியொ டொக்கும்
அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலி
னங்கதன் முதல்வன் கிழவ னாகும்
வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்
றாயிரண் டென்ப வரைத லாறே
வெளிப்படை தானே கற்பினொ டொப்பினு
ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக
வரையாது பிரிதல் கிழவோற் கில்லை
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே
கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமு முண்டே
பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன
ரையர் யாத்தனர் கரண மென்ப
கரணத்தி னமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணு
மெஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்து
மஞ்ச வந்த வுரிமைக் கண்ணு
நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பொருமையி னிலைஇக்
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினு
நாமக் காலத் துண்டெனத் தோழி
யேமுறு கடவு ளேத்திய மருங்கினு
மல்ல றீர வார்வமோ டளைஇச்
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
வேனது சுவைப்பினு நீகை தொட்டது
வானோ ரமிழ்தம் புரையுமா லெமக்கென
வடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணு
மந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்து
மந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினு
மொழுக்கங் காட்டிய குறிப்பினு மொழுக்கத்துக்
களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி
யலமர லுள்ளமொ டளவிய விடத்து
மந்தரத் தெழுதிய வெழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட வொழுகலு
மழிய லஞ்சலென் றாயிறு பொருளினுந்
தானவட் பிழைத்த பருவத் தானு
நோன்மையும் பெருமையு மெய்கொள வருளிப்
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னி னாகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின்
னெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி
யையர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணைப் புல்லிய புல்லா
துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்
புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லன் சீறடி புல்லிய விரவினு 
முறலருங் குரைமையி னூடன்மிகுத் தோளைப் 
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவி னெச்சத்துப் புலம்பிய விருவரைப்
பிரிவி னீக்கிய பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவி னஞ்சிய பையுளுஞ்
சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியுங்
காமத்தின் வலியுங் கைவிடி னச்சமுந்
தானவட் பிழைத்த நிலையின் கண்ணு 
முடன்சேறல் செய்கையொ டுன்னவை பிறவு
மடம்பட வந்த தோழிக் கண்ணும்
வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானு
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணு
மவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங்
காமக் கிழத்தி மனையோ ளென்றிவ
ரேமுறு கிளவி சொல்லிய வெதிருஞ்
சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி
யின்றிச் சென்ற தந்நிலை கிளப்பினு 
மருந்தொழின் முடித்த செம்மற் காலை
விருந்தோடு நல்லவை வேண்டற் கண்ணு
மாலை யேந்திய பெண்டிரு மக்களுங்
கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணு 
மேனைய வாயி லெதிரொடு தொகைஇப்
பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்று
மெண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன
அவனறி வாற்ற வறியு மாகலி
னேற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணு 
முரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற்
பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுங் 
கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலி
னலமரல் பெருகிய காமத்து மிகுதியு 
மின்பமு மிடும்பையு மாகிய விடத்துங் 
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சுபுண்ணுறீஇ
நளியி னீக்கிய விளிவரு நிலையும்
புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்
ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
யியன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி
யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினுந்
தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி
யெங்கையர்க் குரையென விரத்தற் கண்ணுஞ் 
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலுங்
காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
யேமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் 
சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி
யறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமைப்
புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந் 
தந்தைய ரொப்பர் மக்களென் பதனா
லந்தமில் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்
கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது
நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்
பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணும்
கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி
யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காத லெங்கையர் காணி னன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணுந்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை யுள்ளிய வழியுந்
தன்வயிற் சிறைப்பினு மவன்வயிற் பிரிப்பினு
மின்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணுங்
காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங்
கொடுமை யொழுக்கந்  தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக்
காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலு
மாவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ
கிழவோள் செப்பல் கிழவ தென்ப
புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந்
திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி
யன்புறு தக்க கிளத்த றானே
கிழவோன் செய்வினைக் கச்ச மாகும்
தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினு
மாவயி னிகழு மென்மனார் புலவர்
பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த
தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு
மற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ்
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினு
மடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை
யடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி
யிழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்
வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ்
சிறந்த புதல்வனை நேராது புலம்பினு
மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்
பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ்
சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்
பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து
பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வயி
னுறுதகை யில்லாப் புலவியுண் மூழ்கிய
கிழவோள்பா னின்று கெடுத்தற் கண்ணு
முணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள்வயி
னுணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று
தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணு
மருமைக் காலத்துப் பெருமை காட்டிய
வெண்மைக் காலத் திரக்கத் தானும்
பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக்
காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
பிரியுங் காலை யெதிர்நின்று சாற்றிய
மரபுடை யெதிரு முளப்படப்  பிறவும்
வகைபட வந்த கிளவி யெல்லாந்
தோழிக் குரிய வென்மனார் புலவர்
புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணு
மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும்
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினு
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங்
காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற்
றாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக்
காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணு
மின்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து
பின்னர் வந்த வாயிற் கண்ணு
மனையோ ளொத்தலிற் றன்னோ ரன்னோர்
மிகைப்படக் குறித்த கொள்கைக் கண்ணு
மெண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவுங்
கண்ணிய காமக் கிழத்தியர் மேன
கற்புங் காமமு நற்பா லொழுக்கமு
மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகண்
முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்த
லகம்புகன் மரபின் வாயில்கட் குரிய
கழிவினும் வரவினு நிகழ்வினும் வழிகொள
நல்லவை யுரைத்தலு மல்லவை கடிதலுஞ்
செவிலிக் குரிய வாகு மென்ப
சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய
இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங்
கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின்
உணர்ப்புவரை யிறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும்
புலத்தலு மூடலுங் கிழவோற் குரிய
புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக் குரிய
பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி 
மடத்தகு கிழமை யுடைமை யானு
மன்பிலை கொடியை யென்றலு முரியள்
அவன் குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி 
யகன்மலி யூட லகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே
காமக் கடப்பினுட் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவோற் குரித்தே
வழிபடு கிழமை யவட்கிய லான
அருண் முந் துறுத்த வன்புபொதி கிளவி 
பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே
களவுங் கற்பு மலர்வரை வின்றே
அலரிற் றோன்றுங் காமத்து மிகுதி
கிழவோன் விளையாட் டாங்கு மற்றே
மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை 
தம்முள வாதல் வாயில்கட் கில்லை
மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே
முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும் 
பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர்
தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும்
பல்லாற் றானு மூடலிற் றகைத்தலு
முறுதி காட்டலு மறிவுமெய் நிறுத்தலு
மேதுவி னுரைத்தலுந் துணிவு காட்டலு 
மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன
நிலம்பெயர்ந் துரைத்தல் வரைநிலை யுரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய
ஆற்றது பண்பும் கருமத்து விளைவு
மேவல் முடிவும் வினாவுஞ் செப்பு
மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந்
தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு
மிளையோர்க் குரிய கிளவி யென்ப
உழைக்குறுந் தொழிலுங் காப்புமுயர்ந் தோர்க்கு 
நடக்கை யெல்லா மவர்கட் படுமே
பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் 
தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினு
மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினுங்
கிழவோ னிறந்தது நினைஇ யாங்கட் 
கலங்கலு முரிய னென்மனார் புலவர்
தாய்போற் கழறித் தழீஇக் கோட 
லாய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலை யான
அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின்
மகன்றா யுயர்புந் தன்னுயர் பாகுஞ்
செல்வன் பணிமொழி யியல்பாக லான
எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்
புறத்தோ ராங்கட் புரைவ தென்ப
காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங்
கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலு
மாவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ்
செலவுறு கிளவியுஞ் செலவழுங்கு கிளவியு
மன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய
எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப
அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற்
சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர்
தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்த
லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த விரண்டலங் கடையே
கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயி னுரிய வென்ப
மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே
குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும்
துன்புறு பொழுதினு மெல்லாங் கிழவன்
வன்புறுத் தல்லது சேற லில்லை
செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்த தவிர்ச்சி யாகும்
கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்
பூப்பின் புறப்பா டீராறு நாளு
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான
வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது
வேந்துறு தொழிலே யாண்டின தகமே
ஏனைப் பிரிவு மவ்விய னிலையும்
யாறுங் குளனுங் காவு மாடிப்
பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப
காமமஞ் சான்ற கடைக்கோட் காலை
யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி
யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்
சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே
தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி யிளையர் விருந்தினர்
கூத்தர் விறலிய ரறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப
வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருங் காலை
யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை
யுள்ளம் போல வுற்றுழி யுதவும்
புள்ளியற் கலிமா வுடைமை யான
இசைதிரிந் திசைப்பினு மியையுமன் பொருளே
யசைதிரிந் திசையா வென்மனார் புலவர்
நோயு மின்பமு மிருவகை நிலையிற்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய
வுறுப்புடை யதுபோ லணர்வுடை யதுபோல்
மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் 
செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியு
மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு
மறிவும் புலனும் வேறுபட நிறீஇ
யிருபெயர் மூன்று முரிய வாக
வுவம வாயிற் படுத்தலு உவம
மொன்றிடத் இருவர்க்கு முரியபாற் கிளவி
கனவு முரித்தா லவ்விடத் தான
தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின்
பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே
நட்பி னடக்கை யாங்கலங் கடையே
உயிரு நாணு மடனு மென்றிவை
செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு முரிய
வண்ணம் பசந்து புலம்புறு காலை
யுணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி
புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே
உடம்பு முயிரும் வாடியக் காலு
மென்னுற் றனகொ லிவையெனி னல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை
ஒருசிறை நெஞ்சமோ டுசாவுங் காலை
யுரிய தாகலு முண்டென மொழிப
தன்வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலு
மன்ன விடங்க ளல்வழி யெல்லா
மடனொடு நிற்றல் கடனென மொழிப
அறத்தொடு நிற்குங் காலத் தன்றி
யறத்தியன் மரபில டோழி யென்ப
எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுத லுசாத லேதீடு தலைப்பா
டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ
யவ்வெழு வகைய வென்மனார் புலவர்
உற்றுழி யல்லது சொல்ல லின்மையி
னப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப
செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு
மறிவு மருமையும் பெண்பா லான
பொழுது மாறுங் காப்புமென் றிவற்றின்
வழுவி னாகிய குற்றங் காட்டலுந்
தன்னை யழிதலு மவணூ றஞ்சலு
மிரவினும் பகலினு நீவர என்றலுங்
கிழவோன் றன்னை வார லென்றலு
நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த வன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள வென்ப
வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தன்
மரீஇய மருங்கி னுரித்தென மொழிப
தேரும் யானையுங் குதிரையும் பிறவு
மூர்ந்தன ரியங்கலு முரிய ரென்ப
உண்டற் குரிய வல்லாப் பொருளை
யுண்டன போலக் கூறலு மரபே
பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே
காப்புக் கைம்மிகுத லுண்மை யான
அன்பே யறனே யின்ப நாணொடு
துறந்த வொழுக்கம் பழித்தன் றாகலி
னொன்றும் வேண்டா காப்பி னுள்ளே
சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே
உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே
அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப
மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க
நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே
முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொ
னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே
தாயத்தி னடையா வீயச் செல்லா
வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா
வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற
மல்லா வாயினும் புல்லுவ வுளவே
ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும்
வருவகை தானே வழக்கென மொழிப
எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது
தானமர்ந்து வரூஉ மேவற் றாகும்
பரத்தை வாயி னால்வர்க்கு முரித்தே
நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்
ஒருதலை யுரிமை வேண்டியு மகடூஉப்
பிரித லச்ச முண்மை யானு
மம்பலு மலருங் களவுவெளிப் படுக்குமென்
றஞ்ச வந்த வாங்கிரு வகையினு
நோக்கொடு வந்த விடையூறு பொருளினும்
போக்கும் வரைவும் மனைவிகட் டோன்றும்
வருத்த மிகுதி சுட்டுங் காலை
யுரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம்
மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு 
நினையுங் காலைப் புலவியு ளுரிய
நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்
புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே
இறைச்சி தானே வுரிப்புறத் ததுவே
இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே
அன்புறு தகுந விறைச்சியுட் சுட்டலும்
வன்புறை ஆகும் வருந்திய பொழுதே
செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவு
மெய்பெற வுணர்த்துங் கிழவிபா ராட்டே
கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினு
முள்ளத் தூட லுண்டென மொழிப
கிழவோள் பிறள்குண மிவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள்
தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு
மெய்ம்மை யாக வவர்வயி னுணர்ந்து
தலைத்தாட் கழறற மெதிர்ப்பொழு தின்றே
மலிதலு மூடலு மவையலங் கடையே
பொழுது தலைவைத்த கையறு காலை
யிறந்த போலக் கிளக்குங் கிளவி
மடனே வருத்த மருட்கை மிகுதியொ
டவைநாற் பொருட்க ணிகழு மென்ப
இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி
நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும்
வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு
நல்வகையுடைய நயத்திற்ன் கூறியும்
பல்வகை யானும் படைக்கவும் பெறுமே
உயர்மொழிக் கிளவி வுறழுங் கிளவி
யையக் கிளவி யாடூஉவிற் குரித்தே
உறுக ணோம்ப றன்னியல் பாகலி
னுரிய தாகுந் தோழிகண் ணுரனே
உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே
வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்த
றாவின் றுரிய தத்தங் கூற்றே
உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே
அந்தமில் சிறப்பி னாக்கிய இன்பந்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே
மங்கல மொழியும் வைஇய மொழியு
மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங்
கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப
சினனே பேதைமை நிம்பிரி நல்குர
வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே
அன்னை யென்னை யென்றலு முளவே
தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந்
தோன்றா மரபின வென்மனார் புலவர்
ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா
கற்பு மேரு மெழிலு மென்றா
சாயலு நாணு மடனு மென்றா
நோயும் வேட்கையு நுகர்வும் மென்றாங்
காவயின் வரூஉங் கிளவி யெல்லா
நாட்டிய மரபி னெஞ்சுகொளி னல்லது
காட்ட லாகாப் பொருள வென்ப
இமையோர் தேஎத்து மெறிகடல் வரைப்பினு
மவையில் கால மின்மை யான
பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங்
கண்ணிய புறனே நானான் கென்ப
நாலிரண் டாகும் பாலுமா ருண்டே
நகையே யழுகை யிளிவர மருட்கை
யச்சம் பெருமிதம் வெகுளி  யுவகையென்
றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப
எள்ள லிளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப
இளிவே யிழவே யசைவே வறுமையென
விளிவில் கொள்கை யழுகை நான்கே
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொ
டியாப்புற வந்த விளிவர னான்கே
புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே
அணங்கே விலங்கே கள்வர்த மிறையெனப்
பிணங்கல் சாலா வச்ச நான்கே
கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமித நான்கே
உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
றல்ல னீத்த வுவகை நான்கே
ஆங்கவை யொருபா லாக வொருபா
லுடைமை யின்புற னடுவுநிலை யருள
றன்மை யடக்கம் வரைத லன்பெனாஅக்
கைம்மிக னலிதல் சூழ்ச்சி வாழ்த்த
னாணுத றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ
முனித னினைதல் வெரூஉதன் மடிமை
கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக்
கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்த லைய மிகைநடுக் கெனாஅ
விவையு முளவே யவையலங் கடையே
புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்த
னகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே யொன்றென மொழிப
கூழை விரித்தல் காதொன்று களைத
லூழணி தைவர லுடைபெயர்த் துடுத்தலொடு
கெழீஇய நான்கே யிரண்டென மொழிப
அல்கு றைவர லணிந்தவை திருத்த
லில்வலி யுறுத்த லிருகையு மெடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப
பாராட் டெடுத்தன் மடந்தப வுரைத்த
லீரமில் கூற்ற மேற்றலர் நாணல்
கொடுப்பவை கோட லுளப்படத் தொகைஇ
யெடுத்த நான்கே நான்கென மொழிப
தெரிந்துடம் படுத றிளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு
பொருந்திய நான்கே யைந்தென மொழிப
புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு
புலம்பிய நான்கே யாறென மொழிப
அன்ன பிறவு மவற்றொடு சிவணி
மன்னிய வினைய நிமித்த மென்ப
வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே
இவையு முளவே யவையலங் கடையே
இன்பத்தை வெறுத்த றுன்பத்துப் புலம்ப
லெதிர்பெய்து பரித லேத மாய்தல்
பசியட நிற்றல் பசலை பாய்த
லுண்டியிற் குறைத லுடம்புநனி சுருங்கல்
கண்டுயின் மறுத்தல் கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடன் மெய்யே யென்ற
லையஞ் செய்த லவன்றம ருவத்த
லறனளித் துரைத்த லாங்குநெஞ் சழித
லெம்மெய் யாயினு மொப்புமை கோட
லொப்புவழி யுவத்த லுறுபெயர் கேட்ட
னலத்தக நாடிற் கலக்கமு மதுவே
முட்டுவயிற் கழறன் முனிவு மெய்ந் நிறுத்த
லச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்த
றூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்
றாயிரு நான்கே யழிவில் கூட்டம்
தெய்வ மஞ்சல் புரையறந் தெளித
லில்லது காய்த லுள்ள துவர்த்தல்
புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாக்க
மருண்மிக வுடைமை யன்புதொக நிற்றல்
பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல்
புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇச்
சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே
பிறப்பே குடிமை யாண்மை யாண்டொ
டுருவு நிறுத்த காம வாயி
னிறையே யருளே யுணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
யின்புற லேழைமை மறப்போ டொப்புமை
யென்றிவை யின்மை யென்மனார் புலவர்
கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு
முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி
னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே
வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே
வகைபெற வந்த வுவமத் தோற்றம்
விரவியும் வரூஉ மரபின வென்ப
உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை
சிறப்பே நலனே காதல் வலியொ
டந்நாற் பண்பு நிலைக்கள மென்ப 
கிழக்கிடு பொருளொ டைந்து மாகும்
முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு
நுதலிய மரபி னுரியவை யுரிய
சுட்டிக் கூறா வுவம மாயிற்
பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே
உவமையும் பொருளு மொத்தல் வேண்டும்
பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு
மருளறு சிறப்பினஃ துவம மாகும்
பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக்
குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய
அவைதாம்
அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப
வென்ன மான வென்றவை யெனாஅ
வொன்ற வொடுங்க வொட்ட வாங்க 
வென்ற வியப்ப வென்றவை யெனாஅ
வெள்ள விழைய விறப்ப நிகர்ப்பக்
கள்ள கடுப்ப வாங்கவை யெனாஅக்
காய்ப்ப மதிப்பத் தகைய மருள
மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅக்
புல்லப் பொருவப் பொற்பப் போல
வெல்ல வீழ வாங்கவை யெனாஅ
நாட நளிய நடுங்க நந்த
வோடப் புரைய வென்றவை யெனாஅ
வாறா றவையு மன்ன பிறவுங்
கூறுங் காலைப் பல்குறிப் பினவே 
அன்ன வாங்க மான விறப்ப
வென்ன வுறழ தகைய நோக்கொடு
கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம் 
அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்
எள்ள விழைய புல்லப் பொருவக்
கள்ள மதிப்ப வெல்ல வீழ
வென்றாங் கெட்டே பயனிலை யுவமம் 
கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய
வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென்
றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம் 
போல மறுப்ப வொப்பக் காய்த்த
நேர வியப்ப நளிய நந்தவென்
றோத்துவரு கிளவி யுருவி னுவமம் 
தத்த மரபிற் தோன்றுமன் பொருளே
நாலிரண் டாகும் பாலுமா ருண்டே
பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன்
வழிமருங்கு கறியத் தோன்று மென்ப
உவமப் பொருளி னுற்ற துணருந்
தெளிமருங் குளவே திறத்திய லான
உவமப் பொருளை உணருங் காலை
மரீஇய மரபின் வழக்கொடு படுமே 
இரட்டைக் கிளவி யிரட்டை வழித்தே
பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி
முன்ன மரபிற் கூறுங் காலைத்
துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே 
உவமப் போலி யைந்தென மொழிப
தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினு முறுப்பினு முருவினும்
பிறப்பினும் வரூஉந் திறத்திய லென்ப 
கிழவி சொல்லி னவளறி கிழவி
தோழிக் காயி னிலம் பெயர்ந் துரையாது
கிழவோற் காயி னுரனொடு கிளக்கு
மேனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே
இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு
முவம மருங்கிற் றோன்று மென்ப
கிழவோட் குவம மீரிடத் துரித்தே
கிழவோற் காயி னிடம்வரை வின்றே
தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற் குரியர் கொள்வழி யான 
வேறுபட வந்த வுவமத் தோற்றங்
கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்
ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே
உவமத் தன்மையு முரித்தென மொழிப
பயனிலை புரிந்த வழக்கத் தான
தடுமா றுவமங் கடிவரை யின்றே
அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே
நிரனிறுத் தமைத்த னிரனிறை சுண்ணம்
வரைநிலை வைத்த மூன்றலங்கடையே
மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
யாத்த சீரே யடியாப் பெனாஅ
மரபே தூக்கே தொடைவகை யெனாஅ
நோக்கே பாவே யளவிய லெனாஅத்
திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅக்
கேட்போர் களனே கால வகை யெனாஅப்
பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ
முன்னம் பொருளே துறை வகை யெனாஅ
மாட்டே வண்ணமொ டியாப்பியல் வகையி
னாறு தலையிட்ட வந்நா லைந்து
யம்மை யழகு தொன்மை தோலே
விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப்
பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே 
அவற்றுண்
மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு
மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர் 
குறிலே நெடிலே குறிலிணை குறினெடி
லொற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரு நிரையு மென்றிசிற் பெயரே
இருவகை யுகரமொ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப
குறிலிணை யுகர மல்வழி யான
இயலசை முதலிரண் டேனவை வுரியசை
தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது
ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்
முற்றிய லுகரமு மொழி சிதைத்துக் கொளாஅ
நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும்
குற்றிய லுகரமு முற்றிய லுகரமு
மொற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே
அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி
வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே
ஈரசை கொண்டும் மூவசை புணர்த்துஞ்
சீரியைந் திற்றது சீரெனப் படுமே
இயலசை மயக்க மியற்சீ ரேனை
யுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்
முன்னிரை யுறினு மன்ன வாகும்
நேரவ ணிற்பி னியற்சீர்ப் பால
இயலசை யீற்றுமு னுரியசை வரினே
நிரையசை யியல வாகு மென்ப
அளபெடை யசைநிலை யாகலு முரித்தே
ஒற்றள பெடுப்பினு மற்றென மொழிப
இயற்சீ ரிறுதிமு னேர்வ ணிற்பி
னுரிச்சீர் வெண்பா வாகு மென்ப
வஞ்சிச் சீரென வகைபெற் றனவே
வெண்சீ ரல்லா மூவசை யான
தன்பா வல்வழித் தானடை யின்றே
வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய
வெண்பா புரிச்சீ ராசிரிய வுரிச்சீ
ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே
கலித்தளை மருங்கிற் கடியவும் படா
கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர்
நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே
வஞ்சி மருங்கினு மிறுதி நில்லா
இசைநிலை நிறைய நிற்குவ வாயி
னசைநிலை வரையார் சீர்நிலை பெறவே 
இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே
தளைவகை சிதையாத் தன்மை யான
வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே
இன்சீ ரியைய வருகுவ தாயின்
வெண்சீர் வரையா ராசிரிய வடிக்கே 
அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீ
ரொன்றுத லுடைய வோரொர் வழியே 
நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே
அடியுள் ளனவே தளையொடு தொடையே
அடியிறந்து வருத லில்னென மொழிப
அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே
நாலெழுத் தாதி யாக வாறெழுத்
தேறிய நிலத்தே குறளடி யென்ப 
ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே
யீரெழுத் தேற்ற மல்வழி யான
பத்தெழுத் தென்ப நேரடிக் களவே
யொத்த நாலெழுத் தேற்றலங் கடையே
மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே
யீரெழுத்து மிகுதலு மியல்பபென மொழிப
மூவா றெழுத்தே கழிநெடிற் களவே
ஈரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப
சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது
நேர்நிலை வஞ்சிக் காறு மாகும் 
எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே
குன்றலு மிகுதலு மில்லென மொழிப
உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ
வுயிர்த்திற மியக்க மின்மை யான 
வஞ்சி யடியே யிருசீர்த் தாகும்
தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே
முச்சீ ரானும் வருமிட னுடைத்தே
அசைகூ னாகு மவ்வயி னான
சீர்கூ னாத னேரடிக் குரித்தே
ஐவகை யடியும் விரிக்குங் காலை
மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்து
வெழுபது வகையின் வழுவில வாகி
யறுநூற் றிருபத் தைந்தா கும்மே
ஆங்கனம் விரிப்பி னளவிறந் தனவே
பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை
ஐவகை யடியு மாசிரியக் குரிய
விராஅய் வரினு மொரூஉநிலை யிலவே
தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினு
மின்சீர் வகையி னைந்தடிக்கு முரிய
தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா
சீரியை மருங்கி னோரசை யொப்பி
னாசிரியத் தளையென் றறியல் வேண்டும்
குறளடி முதலா வளவடி காறு
முறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப
அளவுஞ்சிந்தும் வெள்ளைக் குரிய
தளைவகை யொன்றாத் தன்மை யான
அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி
யிருநெடி லடியுங் கலியிற் குரிய
நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்பினும்
வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப
விராஅய தளையு மொரூஉநிலை யின்றே
இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கி
னிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே
வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு
மைஞ்சீ ரடியு முளவென மொழிப
அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு
நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே
எழுசீ ரடியே முடுகிய னடக்கும்
முடுகியல் வரையார் முதலீ ரடிக்கும்
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினு
மூவகை யடியு முன்னுத லிலவே
ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற்
றோற்ற முச்சீர் தாகு மென்ப
இடையும் வரையார் தொடையுணர் வோரே
முச்சீர் முரற்கையு னிறையவும் நிற்கும்
வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே
வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்
அசைசீர்த் தாகு மவ்வயி யான
நேரீற் றியற்சீர் நிரையு நிரைபுஞ்
சீரேற் றிறூஉ மியற்கைய வென்ப
நிரையவ ணிற்பி னேரு நேர்பும்
வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர்
எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே
வெண்பா வியலினும் பண்புற முடியும்
எழுத்து முதலா வீண்டிய வடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்
பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
யங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி
னாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்
மரபே தானு
நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று
அகவ லென்ப தாசிரி யம்மே
அஃதான் றென்ப வெண்பா யாப்பே
துள்ள லோசை கலியென மொழிப
தூங்கலோசை வஞ்சி யாகும்
மருட்பா வேனை யிருசா ரல்லது
தானிது வென்னுந் தனிநிலை யின்றே
அவ்விய லல்லது பாட்டாங்குக் கிளவார்
தூக்கியல் வகையே யாங்கென மொழிப
மோனை யெதுகை முரணே யியைபென
நானெறி மரபின தொடைவகை யென்ப
அளபெடை தலைப்பெய வைந்து மாகும்
பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபு
மமைத்தனர் தெரியி னவையுமா ருளவே
நிரனிறுத் தமைத்தலு மிரட்டை யாப்பு
மொழிந்தவற் றியலான் முற்று மென்ப
அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை
அஃது தொழித் தொன்றி னெதுகை யாகும்
ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய
மொழியினும் பொருளினு முரணுதன் முரணே
இறுவா யொன்ற லியைபின் யாப்பே
அளபெழி னவையே யளபெடைத் தொடையே
ஒருசீ ரிடையிட் டெதுகை யாயிற்
பொழிப்பென மொழிதல் புலவ ராறே
இருசீ ரிடையிடி னொரூஉவென மொழிப
சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற்
சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப
மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
யீராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்
றொன்பஃ  தென்ப வுணர்ந்திசி னோரே
தெரிந்தனர் விரிப்பின் வரம்பில வாகும்
தொடைவகை நிலையே யாங்கென மொழிப
மாத்திரை முதலா வடிநிலை காறு
நோக்குதற் காரண நோக்கெனப் படுமே
ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே  ****
அந்நிலை மருங்கி னறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப
பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பி
னாசிரி யப்பா வெண்பா வென்றாங்
காயிரு பாவினு ளடங்கு மென்ப
ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப
வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே
வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ
வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே
செவியறி வுறூஉவென வவையு மன்ன
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்புங் கடுவும் போல வெஞ்சொற்
தாங்குத லின்றி வழிநனி பயக்குமென்
றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே
அவையடக் கியலே யரிறபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்
றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே
செவியுறை தானே
பொங்குத லின்றிப் புரையோர் நாப்ப
ணவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே
ஒத்தா ழிசையு மண்டில யாப்புங்
குட்டமு நேரடிக் கொட்டின வென்ப
குட்ட மெருத்தடி யுடைத்து மாகும்
மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டுஞ்
செந்தூக் கியல வென்மனார் புலவர்
நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே
கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளொ
டொத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின
கைக்கிளை தானே வெண்பா வாகி
யாசிரிய வியலான் முடியவும் பெறுமே
பரிபா டல்லே தொகைநிலை வகையி
னிதுபா வென்னு மியனெறி யின்றிப்
பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப
கொச்சக மராகஞ் சுரிதக மெருத்தொடு
செப்பிய நான்குந் தனக்குறுப் பாக
காமங் கண்ணிய நிலைமைத் தாகும்
சொற்சீ ரடியு முடுகிய லடியு
மப்பா நிலைமைக் குரிய வாகும்
கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்து
முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியு
மொழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ்
சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே
அங்கதந் தானே யரிறபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே
செம்பொரு ளாயின் வசையெனப் படுமே
மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும்
செய்யுட் டாமே யிரண்டென மொழிப
துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற்
செவியுறைச் செய்யு ளதுவென மொழிப
வசையொடு நசையொடும் புணர்ந்தன் றாயி
னங்கதச் செய்யு ளென்மனார் புலவர்
ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே
அவற்றுள்
ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும்
இடைநிலைப் பாட்டொடு தரவுபோக் கடையென
நடைநவின் றொழுகு மொன்றென மொழிப
தரவே தானு நாலடி யிழிபா
யாறிரண் டுயர்பென் றேறவும் பெறுமே
இடைநிலைப் பாட்டே
தரவகப் பட்ட மரபின தென்ப
அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர்
நடை நவின் றொழுகு மாங்கென் கிளவி
போக்கியல் வகையே வைப்பெனப் படுமே
தரவிய லொத்து மதனகப்படுமே
புரைதீ ரிறுதி நிலையுரைத் தன்றே
ஏனையொன்றே
தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே
அதுவே
வண்ணக மொருபோ கெனவிரு வகைத்தே
வண்ணகந் தானே
தரவே தாழிசை யெண்ணே வாரமென்
றந்நால் வகையிற் றோன்று மென்ப
தரவே தானு
நான்கு மாறு மெட்டு மென்ற
நேரடி பற்றிய நிலைமைத் தாகும்
ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே
தரவிற் சுருங்கித் தோன்று மென்ப
அடக்கியல் வாரந் தரவொ டொக்கும்
முதற்றொடை பெருகிச் சுருங்குமன் னெண்ணே
எண்ணிடை யொழித லேத மின்றே
சின்ன மல்லாக் காலை யான
ஒருபோ கியற்கையு மிருவகைத் தாகும்
கொச்சக வொருபோ கம்போ தரங்கவென்
றொப்ப நாடி யுணர்தல் வேண்டும்
தரவின் றாகித் தாழிசை பெற்றுந்
தாழிசை யின்றித் தரவுடைத் தாகியு
மெண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியு
மடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும்
யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது
கொச்சக வொருபோ காகு மென்ப
ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பே
அம்போ தரங்க மறுபதிற் றடித்தே
செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை
எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெ
அணடக்கியல் வாரமொ டந்நிலைக் குரித்தே
ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற்
றிரிபின்றி வருவது கலிவெண் பாட்டே
தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து
மைஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும்
வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்
பாநிலை வகையே கொச்சகக் கலியென
நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே
கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்தும்
போக்கின் றாக லுறழ்கலிக் கியல்பே
ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை
யாயிர மாகு மிழிபுமூன் றடியே
நெடுவெண் பாட்டே முந்நா லடித்தே
குறுவெண் பாட்டி னளவெழு சீரே
அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்
கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள்
செவியறி வாயுறை புறநிலை யென்றிவை
தொகுநிலை மரபி னடியில வென்ப
புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத்
திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின்
வெண்பா வியலினு மாசிரிய வியலினும்
பண்புற முடியும் பாவின வென்ப
பரிபாட் டெல்லை
நாலீ ரைம்ப துயர்படி யாக
வையைந் தாகு மிழிபடிக் கெல்லை 
அளவியல் வகையே யனைவகைப் படுமே
எழுநிலத் தெழுந்த செய்யுட் டெரியி
னடிவரை யில்லன வாறென மொழிப
அவைதாம்
நூலி னான வுரையி னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
வேது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான
அவற்றுள்
நூலெனப் படுவது நுவலுங் காலை
முதலு முடிவு மாறுகோ ளின்றி
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
யுண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே
அதுவே தானு மொருநால் வகைத்தே
ஒரு பொரு ணுதலிய சூத்திரத் தானு
மினமொழி கிளந்த வோத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத் தானு
மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென்
றாங்கனை மரபி னியலு மென்ப
அவற்றுட் சூத்திரந் தானே
யாடி நிழலி னறியத் தோன்றி
நாடுத லின்றிப் பொருணனி விளங்க
யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே
நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்
ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரி னதுபடல மாகும்
மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற்
றோன்றுமொழிப் புலவரது பிண்ட மென்ப
பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்
றுரைவகை நடையே நான்கென மொழிப
அதுவே தானு மிருவகைத் தாகும்
ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே
யொன்றே யார்க்கும் வரைநிலை யின்றே
ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந்
தோன்றுவது கிளந்த துணிவி னானு
மென்றிரு வகைத்தே பிசிவகை நிலையே
நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையு
மெண்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ
மேது நுதலிய முதுமொழி யென்ப
நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த
மறைமொழிதானே மந்திர மென்ப
எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி யென்ப
பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டி னியல பண்ணத்தி யியல்பே 
அதுவே தானும் பிசியொடு மானும்
அடிநிமிர் கிளவி யீரா றாகும்
அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே
கிளரியல் வகையிற் கிளந்தன தெரியி
னளவியல் வகையே யனை வகைப் படுமே
கைக்கிளை முதலா வெழுபெருந் திணையு
முற்கிளந் தனவே முறைநெறி வகையின்
காமப் புணர்ச்சியு மிடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்
றாங்கநால் வகையினு மடைந்த சார்பொடு
மறையென மொழிதன் மறையோ ராறே
மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலு
மிவைமுத லாகிய வியனெறி திரியாது
மலிவும் புலவியு மூடலு முணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனனப் படுமே
மெய்பெறு அவையே கைகோள் வகையே
பார்ப்பான் பாங்கன் றோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொ
டளவியன் மரபி னறுவகை யோருங்
களவினிற் கிளவிக் குரிய ரென்ப
பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற வறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்
ஊரு மயலுஞ் சேரி யோரு
நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங்
கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது
கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும்
கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடு
நற்றாய் கூறன் முற்றத் தோன்றாது
ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப
இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு
வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன்
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
மொழிந்தாங் குரியர் முன்னத்தி னெடுத்தே
மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு
நினையுங் காலைக் கேட்குந ரவரே
பார்ப்பா ரறிவ ரென்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே
பரத்தை வாயி னெனவிரு கூற்றும்
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய னிலவே
வாயி லுசாவே தம்முள முரிய
ஞாயிறு திங்க ளறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
யவைவயல பிறவு நுதலிய நெறியாற்
சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்
ஒரு நெறிப் பட்டாங்கு கோரியன் முடியுங்
கரும நிகழ்ச்சி யிடமென மொழிப
இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந்
திறத்தியன் மருங்கிற் றெரிந்தன ருள்ளப்
பொருணிகழ் வுரைப்பது கால மாகும்
இதுநனி பயக்கு மிதனா னென்னுந்
தொகுநிலைக் கிளவி பயனெனப் படுமே
உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்
எண்வகை யியனெறி பிழையா தாகி
முன்னுறக் கிளந்த முடிவின ததுவே
சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை
புல்லிய கிளவி யெச்ச மாகும்
இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியவென்
றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம்
இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவு
மொழுக்கமு மென்றிவை யிழுக்குநெறி யின்றி
யிதுவா கித்திணைக் குரிப்பொரு ளென்னாது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப
அவ்வம் மக்களும் விலங்கு மன்றிப்
பிறவண் வரினுந் திறவதி னாடித்
தத்த மியலின் மரபொடு முடியி
னத்திறந் தானே துறையெனப் படுமே
அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு
மியன்றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்
மாட்டு மெச்சமு நாட்ட லின்றி
யுடனிலை மொழியினுந் தொடர்நிலை பெறுமே
வண்ணந் தாமே நாலைந் தென்ப
அவைதாம்
பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண
மியைபு வண்ண மளபெடை வண்ண
நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ்
சித்திர வண்ண நலிபு வண்ண
மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண
மொழுகு வண்ண மொரூஉ வண்ண
மெண்ணு வண்ண மகைப்பு வண்ணத்
தூங்கல் வண்ண மேந்தல் வண்ண
முருட்டு வண்ண முடுகு வண்ணமென்
றாங்கன மொழிப வறிந்திசி னோரே 
அவற்றுள்  பாஅ வண்ணஞ்
சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்
தாஅ வண்ண
மிடையிட்டு வந்த வெதுகைத் தாகும்
வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலுமே 
மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே
இயைபு வண்ண மிடையெழுத்து மிகுமே
அளபெடை வண்ண மளபெடை பயிலும்
நெடுஞ்சீர் வண்ணநெட் டெழுத்துப் பயிலும்
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்
சித்திர வண்ண
நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வருமே
நலிபு வண்ணம் மாய்தம் பயிலும்
அகப்பாட்டு வண்ண
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே
புறப்பாட்டு வண்ண
முடிந்தது போன்று முடியா தாகும்
ஒழுகு வண்ண மோசையி னொழுகும்
ஒரூஉ வண்ணமொரீஇத் தொடுக்கும்
எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும்
அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும்
தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்
ஏந்தல் வண்ணஞ்
சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும்
உருட்டு வண்ண மராகந் தொடுக்கும்
முடுகு வண்ண
மடியிறந் தோடி யதனோ ரற்றே
வண்ணந் தாமே யிவையென மொழிப
வனப்பிய றானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலொ
டம்மை தானே யடிநிமிர் பின்றே
செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பி
னவ்வகை தானே யழகெனப் படுமே
தொன்மைதானே
யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்
விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே
ஞகாரை முதலா ளகாரை யீற்றுப்
புள்ளி யிறுதி யியைபெனப் படுமே
சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது
குறளடி முதலா வைந்தடி யொப்பித்
தோங்கிய மொழியா னாங்கன மொழுகி
னிழைபி னிலக்கண மியைந்த தாகும்
செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி
யிழைத்த விலக்கணம் பிழைத்தன போல
வருவ வுளவெனினும் வந்தவற் றியலாற்
றிரிபின்றி முடித்த றெள்ளியோர் கடனே
மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையுங்
கன்றும் பிள்ளையு மகவு மறியுமென்
றொன்பதுங் குழவியொ டிளமைப் பெயரே
ஏறு மேற்றையு மொருத்தலுங் களிறுஞ்
சேவுஞ் சேவலு மிரலையுங் கலையு
மோத்தையுந் தகரு முதளு மப்பரும்
போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும்
யாத்த வாண்பாற் பெயரென மொழிப
பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணு
மூடு நாகுங் கடமையு மளகு
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவு
மந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே
அவற்றுடட்
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை
தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன
மூங்கா வெருகெலி மூவரி யணிலொ
டாங்கவை நான்குங் குட்டிக் குரிய
பறழெனப் படினு முறழாண் டில்லை
நாயே பன்றி புலிமுய னான்கு
மாயுங் காலை குருளை யென்ப
நரியு மற்றே நாடினர் கொளினே
குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்
பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை
கொள்ளுங் காலை நாயலங் கடையே
யாடுங் குதிரையு நவ்வியு முழையு
மோடும் புல்வா யுளப்பட மறியே
கோடுவாழ் குரங்குக் குட்டி கூறுப
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு
மவையு மன்ன வப்பா லான
யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு
மானொ டைந்துங் கன்றெனற் குரிய
எருமையு மரையும் வரையா ராண்டே
கவரியுங்கராமு நிகரவற் றுள்ளே
ஒட்டக மவற்றொ டொருவழி நிலையும்
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை
ஆவு மெருமையு மவை சொலப்படுமே
கடமையு மரையு முதனிலை யொன்றும்
குரங்கு முசுவு மூகமு மூன்றும்
நிரம்ப நாடி னப்பெயர்க் குரிய
குழவியு மகவு மாயிரண் டல்லவை
கிழவ வல்ல மக்கட் கண்ணே
பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே
நெல்லும் புல்லும் நேரா ராண்டே
சொல்லிய மரபி னிளமை தானே
சொல்லுங் காலை யவையல விலவே
ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
யிரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
யாறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
புல்லு மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
நந்து முரளு மீரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
சிதலு மெறும்பு மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
வண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மாவு மாக்களு மையறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மக்க டாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்
கேழற் கண்ணுங் கடிவரை யின்றே
புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமொ டொருத்த லொன்றும்
வார்கோட் டியானையும் பன்றியு மன்ன
ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும்
பன்றி புல்வா யுழையே கவரி
யென்றிவை நான்கு மேறெனற் குரிய
எருமையும் மரையும் பெற்றமு மன்ன
கடல்வாழ் சுறவு மேறுனப் படுமே
பெற்ற மெருமை புலிமரை புல்வாய்
மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே
நீர்வாழ் சாதியு ளறுபிறப் புரிய
மயிலு மெழாலும் பயிலத் தோன்றும்
இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய
கலையென் காட்சி யுழைக்கு முரித்தே
நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்
மோத்தையுந் தகரு முதளு மப்பரும்
யாத்த வென்ப யாட்டின் கண்ணே
சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு
மாயிருந் தூவி மயிலலங் கடையே
ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லா
மேற்றைக் கிளவி யுரித்தென மொழிப
ஆண்பா லெல்லா மாணெனற் குரிய
பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய
காண்ப வவையவை யப்பா லான
பிடியென் பெண்பெயர் யானை மேற்றே
ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய
புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப
பேடையும் பெடையு நாடி னொன்றும்
கோழி கூகை யாயிரண் டல்லவை
சூழுங் காலை யளகென லமையா
அப்பெயர்க் கிழமை மயிற்கு முரித்தே
புல்வாய் நவ்வி யுழையே கவரி
சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே
பன்றி புல்வாய் நாயென மூன்று
மொன்றிய வென்ப பிணவின் பெயர்க்கொடை
பிணவல் எனினும் அவற்றின் மேற்றே
பெற்றமு மெருமையு மரையு மாவே
பெண்ணும் பிணாவு மக்கட் குரிய
எருமையு மரையும் பெற்றமு நாகே
நீர்வாழ் சாதியு ணந்து நாகே
மூடுங் கடமையும் யாடல பெறாஅ
பாட்டி என்பது பன்றியும் நாயும்
நரியு மற்றே நாடினர் கொளினே
குரங்கு முசுவு மூகமு மந்தி
குரங்கி னேற்றினைக் கடுவ னென்றலு
மரம்பயில் கூகையைக் கோட்டா னென்றலுஞ்
செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும்
குதிரையு ளாணினைச் சேவ லென்றலு
மிருணிறப் பன்றியை யேன மென்றலு
மெருமையு ளாணினைக் கண்டி யென்றலு
முடிய வந்த வவ்வழக் குண்மையிற்
கடிய லாகா கடனறிந் தோர்க்கே
பெண்ணு மாணும் பிள்ளையு மவையே
நூலே கரக முக்கோன் மணையே
யாயுங் காலை யந்தணர்க் குரிய
படையுங் கொடியுங் குடையு முரசு
நடைநவில் புரவியுங் களிறுந் தேருந்
தாரு முடியு நேர்வன பிறவுந்
தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய
அந்த ணாளர்க் குரியவு மரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே
பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர்
நெடுந்தகை செம்ம லென்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுத லவர்க்குரித் தன்றே
ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி யவையவை பெறுமே
தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரிய
நிலைமைக் கேற்ப நிகழ்த்துக  வென்ப
இடையிரு வகையோ ரல்லது நாடிற்
படைவகை பெறாஅ ரென்மனார் புலவர்
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
மெய்தெரி வகையி னெண்வகை யுணவின்
செய்தியும் வரையா ரப்பா லான
கண்ணியுந் தாரு மெண்ணின ராண்டே
வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி
வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே
அந்த ணாளர்க் கரசுவரை வின்றே
வில்லும் வேலுங் கழலும் கண்ணியுந்
தாரு மாலையுந் தேரும் வாளு
மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய
அன்ன ராயினு மிழிந்தோர்க் கில்லை
புறக்கா ழனவே புல்லென மொழிப
வகக்கா ழனவே மரமென மொழிப
தோடே மடலே யோலை யென்றா
வேடே யிதழே பாளை யென்றா
வீர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்
இலையே தளிரே முறியே தோடே
சினையே குழையே பூவே யரும்பே
நனையுள் ளுறுத்த வனையவை யெல்லா
மரனொடு வரூஉங் கிளவி யென்ப
காயே பழமே தோலே செதிளே
வீழொ டென்றாங் கவையு மன்ன
நிலந்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
கலந்த மயக்க முலக மாதலி
னிருதிணை யைம்பா லியனெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்
மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லி னானே
மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்
வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட் டாக லான
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைபடு நூறா மிருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்
வழியெனப் படுவ ததன்வழித் தாகும்
வழியி னெறியே நால்வகைத் தாகும்
தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலொ டனைமர பினவே
ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
யீரைங் குற்றமு மின்றி நேரிதின்
முப்பத் திருவகை யுத்தியொடு புணரி
னூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்
உரையெடுத் ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம்
புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும்
விதித்தலும் விலக்கலு முடையோர் வகையொடு
புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே
மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு
சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகி
சொல்லுங் காலை யுரையகத் தடக்கி
நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித்
துளக்க லாகாத் துணைமை யெய்தி
யளக்க லாகா வரும்பொருட் டாகிப்
பலவகை யானும் பயன்றெரி புடையது
சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்
பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்
கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்
விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா
வேது நடையினு மெடுத்துக் காட்டினு
மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே
சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற
வின்றி யமையா தியைபவை யெல்லா
மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே
மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த்
தன்னூ லானு முடிந்த நூலானு
மையமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கித்
தெற்றென வொருபொரு ளொற்றுமை கொளீஇந்
துணிவொடு நிற்ற லென்மனார் புலவர்
சொல்லப் பட்டன வெல்லா மாண்பு
மறுதலை யாயினு மற்றது சிதைவே
சிதைவில வென்ப முதல்வன் கண்ணே
முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும்
வல்லோன் புணரா வாரம் போன்றே
சிதைவெனப் படுபவை வசையற நாடிற்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
பொருளில மொழிதன் மயங்கக் கூறல்
கேட்போர்க் கின்னா யாப்பிற் றாறல்
பழித்த மொழியா னிழுக்கங் கூற
றன்னா னொருபொருள் கருதிக் கூற
லென்ன வகையினு மனங்கோ ளின்மை
யன்ன பிறவு மவற்றுவிரி யாகும்
எதிர்மறுத் துணரின் றிறத்தவு மவையே
ஒத்த காட்சி யுத்திவகை விரிப்பி
னுதலிய தறித லதிகார வகையே
தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தன்
மொழிந்த பொருளொ டொன்ற வவ்வயின்
மொழியா ததனை முட்டின்றி முடித்தல்
வாரா ததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராத துணர்த்தன்
முந்து மொழிந்ததன் றலைதடு மாற்றே
யொப்பக் கூற லொருதலை மொழிதல்
தன்கோட் கூறன் முறைபிற ழாமை
பிறனுடம் பட்டது தானுடம் படுத
லிறந்தது காத்த லெதிரது போற்றன்
மொழிவா மென்றல் கூறிற் றென்ற
றான்குறி யிடுத லொருதலை யன்மை
முடிந்தது காட்ட லாணை கூறல்
பல்பொருட் கேற்பி னல்லது கோட
றொகுத்த மொழியான் வகுத்தனர் கோடன்
மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல்
பிறன்கோட் கூற லறியா துடம்படல்
பொருளிடை யிடுத லெதிர்பொரு ளுணர்த்தல்
சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்த
றந்துபுணர்ந் துரைத்தன் ஞாபகங் கூற
லுய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
சொல்லிய வல்ல பிறவவண் வரினுஞ்
சொல்லிய வகையாற் சுருங்க நாடி
மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்
டனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டு
நுனித்தகு புலவர் கூறிய நூலே